நாய்களில் பல வகைகள் உண்டு. அவற்றில் நன்கு மொசுமொசுவென்று இருக்கும் நாய்கள் தான் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில் அவைகள் பார்ப்பதற்கு பொம்மை நாய்க் குட்டி போன்று இருப்பதால், குழந்தைகளின் செல்லப்பிராணிகள் ஆகின்றன. அப்படி குழந்தைகளால் அதிகம் விரும்பப்பட்டு, வளர்க்கப்படும் நாய் இனங்களை இங்கு பார்ப்போம்.
கோமண்டர் (Komondor)
இது ஒரு வகையான ஹங்கேரியன் ஷெபெர்டு நாய். இந்த நாய்க்கு அதிகமான ரோமங்கள் இருப்பதோடு, அவை சுருண்டு இருக்கும். இதுவும் பார்ப்பதற்கு சூப்பராக இருக்கும்.
மால்தீஸ் (Maltese)
மொசுமொசுவென இருக்கும் குட்டி நாய். இது வீட்டில் வளர்க்கக்கூடிய ஒரு சிறந்த நாய். இந்த நாயிடம் அன்பை காட்டினால், உயிரையே கொடுக்கும் அளவிற்கு அது பாசம் வைக்கும்.
பூடில் (Poodle)
இந்த மொசுமொசு நாய், பொம்மை போன்று இருக்கும். இந்த நாய் சிறிய பெண் குழந்தைகளுக்கு நல்ல துணையாக இருக்கும். நன்கு விளையாடுவதோடு, வீட்டில் எந்தவொரு பிரச்சினையையும் கொடுக்காது.
ஆப்கன் ஹவுண்ட் (Afghan Hound)
இந்த நாய்கள் மிகவும் ஒல்லியாகவும், உயரமாகவும் இருப்பதோடு, அழகான பட்டுப்போன்ற ரோமங்களைக் கொண்டவை. இவை நன்கு வேகமாக ஓடக்கூடியவை மற்றும் விசுவாசமாக இருக்கக்கூடியவை.
இவை அனைத்தும் பார்ப்பதற்கு மட்டுமல்ல, பழகுவதற்கும் பாசமான நாய் இனங்கள். குழந்தைகளை ஒருபோதும் அச்சுறுத்தாத நாய் இனங்கள் இவை.
நன்றி | மாலை மலர்