விழியும் மொழியும் நாணும் – மனம்
மலரையும் நிலவையும் நாடும்
இரவும் பகலும் ஒன்றாகத் தோணும்
இணைந்த நெஞ்சம் பந்தாக மோதும்
இருவரின் இதயமும் இடமாறிய பின்னே
அறிவு அரிய சிந்தனையில் இறங்கும்
அது அன்னையையும் தந்தையையும்
யாந்திரை நோக்க அறிவுறுத்துதம்
அதற்கு ஏதேதோ நாடகம் நடிக்கும்
இரண்டு ஜீவனும் விரைந்த பின்னே
கள்ள மூளை இறக்கை விரிக்கும்
வீட்டுத் தோட்டம் ஆத்தோர ஆலமரம்
தெருக் கோயில் சின்னாத்தா இல்லம்
எது சிறந்த இடமமென குறிப்பெடுக்கும்
அத்தனையும் சாதகமான பின்னே
தேர்வான இடத்துக்கு தோர்வான
உடையை கரம் விரைந்து எடுக்கும்
மூன்று முழம் மல்லிகை முடியில் ஏறும்
அயல் நாட்டு சாயம் இதழில் சாயும்
அலங்காரம் பரபப்பாக ஆன பின்னே
கண்ணோரம் கண்டு
நரம்போடு கொண்டு
உணர்வோடு இணைத்தவனை
எத்தனை மணி வரை தன்னோடு
நிறுத்தலாம் என ஆத்ம ஜீவன்
கடிகாரம் திருப்பி நாவோடு
கணக்குப் படிக்கும்
இத்தனையும் ஈருள்ளம் ஓர்
உள்ளமான உண்மைக் காதலாக
உருவெடுத்த பின்னே
உருவாகிடும் புது வெல்லம்
நிறைவாகிடும் இன்ப வெள்ளம்
(ஓவியருக்கு வாழ்த்துகள்)
நன்றி : கவிக்குயில் ஆர். எஸ் கலா | எழுத்து இணையம்