புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் கருஞ்சீரகத்தில் இவ்வளவு நன்மைகளா?

கருஞ்சீரகத்தில் இவ்வளவு நன்மைகளா?

2 minutes read

கருஞ்சீரகத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒரு பொருளாகும். இவை உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை அகற்ற துணை புரிகின்றன. அதனால் உடல் செல்கள் சிதைவுறாமல் பாதுகாக்கப்படுகின்றன.

ஆக ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படாமல் இருக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் பெரும் பங்கு ஆற்றுகின்றன. கருஞ்சீரகத்தைத் தினமும் உணவில் சேர்த்து அதன் மூலம் உடலில் புற்றுநோய் ஏற்படாமல் விரட்டி அடிக்க முடியும்.

தீராத சளி, இருமல் போன்ற தொல்லைகளுக்கு கருஞ்சீரகம் ஒரு சிறந்த நிவாரணியாகும். தினம் பாலில் சிறிதளவு கருஞ்சீரகத்தைச் சேர்த்து அருந்துவதன் மூலம் இந்த தொந்தரவுகள் அனைத்தும் குணமடையும். தீராத ஆஸ்துமா தொந்தரவு கூட , தினம் கருஞ்சீரகத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் படிப்படியாகக் கட்டுக்குள் வரும்.

குழந்தைப்பேறு அடைந்த பெண்களின் கர்ப்பப்பையில் அழுக்குகள் இருக்கக்கூடும். கர்ப்பப்பையைத் தூய்மைப்படுத்தி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிக அவசியம்.

இதனால் எதிர்காலத்தில் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட தொல்லைகள் வராமல் தடுக்கலாம். மேலும் மீண்டும் கருத்தரிப்பதிலும் சிக்கல் ஏற்படாது. கருஞ்சீரகம் பிரசவத்திற்குப் பிறகு கர்ப்பப்பையைச் சுத்தப்படுத்துவதில் கை கொடுக்கின்றது.

கருஞ்சீரகத்தைப் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது பனை வெல்லம் சேர்த்து தினமும் எடுத்துக்கொள்ளும் போது கர்ப்பப்பையில் உள்ள அனைத்து அழுக்குகளும் நீங்கி சுத்தமடையும்.

கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களில் சிறுநீரக கற்களைக் கரைக்கும் தன்மை குறிப்பிடத்தக்கது. வெந்நீரில் தேன் மற்றும் ஒரு கையளவு கருஞ்சீரகப் பொடியைக் கலந்து கொள்ள வேண்டும்.

இதை தொடர்ந்து பருகி வரச் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் முழுவதுமாக கரையும். இந்த எளிய வீட்டுக் குறிப்பைப் பயன்படுத்திப் பலன் அடையலாம்.

நீரிழிவு நோயால் தாக்கப்பட்டவர்கள் உடலில் இரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகமாகக் காணப்படும். அதனால் இவர்கள் தங்கள் இரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்க உரிய உணவு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவர்கள் இந்த விசயத்தை எதிர்கொள்ள கருஞ்சீரகத்தைப் பயன்படுத்தலாம். ஏனென்றால் கருஞ்சீரகம் ரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகின்றது.

அதனால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் கருஞ்சீரகத்தை அளவான அளவு எடுத்துக்கொள்ளலாம். இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளை இவர்கள் தவிர்த்துக் கொள்ளலாம்.

மேலும் கருஞ்சீரகம் கணைய செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. சுருங்கச் சொன்னால் இவர்களுக்குக் கருஞ்சீரகம் ஒரு வரப்பிரசாதமாகும்.

வயிற்றுப் புண் ஏற்பட்டுச் சிரமப்படுபவர்கள் கருஞ்சீரகப் பொடியை தண்ணீரில் கலந்து தினமும் குடித்துவர வேண்டும். இவ்வாறு செய்வதால் வயிற்றில் ஏற்பட்ட புண்கள் அனைத்தும் சீக்கிரம் ஆறிவிடும்.

மருந்து ,மாத்திரைகளை விட கருஞ்சீரகம் இந்தப் பிரச்சனையை நிவர்த்தி செய்ய பெரிதும் உதவுகிறது. அதுபோக தொடர்ச்சியாகக் கருஞ்சீரகத்தை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு அல்சர் வியாதி வர வாய்ப்பு இல்லை.

நம் உடலுக்கு கொலஸ்ட்ரால் தேவையான ஒன்றுதான். இதில் நல்ல கொலஸ்ட்ரால் உடலுக்கு நன்மை செய்யும் ,கெட்ட கொலஸ்ட்ரால் தீங்கு செய்யும். கருஞ்சீரகம் இந்த வகையில் ஒரு அற்புதமான மருந்து பொருளாக உள்ளது.

ஏனென்றால் இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. அதே சமயம் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்கின்றது. கொழுப்பு சம்பந்தப்பட்ட வியாதி ஏற்படாமல் இருக்கக் கருஞ்சீரகம் (Karunjeeragam) வியக்க வைக்கும் வகையில் உதவுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More