புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் மாத விலக்கு பிரச்னைக்கு தீர்வை தரும் தும்பை

மாத விலக்கு பிரச்னைக்கு தீர்வை தரும் தும்பை

3 minutes read

தும்பை (Leucas Aspera) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இது சித்த மருத்துவத்தில் நச்சு முறிவில் தும்பை தனித்த ஒரு இடம் பெறுகிறது.

இதனை ஆயுர்வேத மருத்துவ முறையில் துரோன புஸ்பி என்று அழைப்பர்.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையுள்ள அனைத்து பிரச்சினைகளைகளுக்கும் இது ஓர் அற்புத மருந்தாக திகழ்கின்றது.

தும்பை இலை முதல் அதன் அனைத்து பாகங்களும் மருத்துவத்திற்கு உதவி புரிகின்றது. தற்போது அது என்ன என்பதை பார்ப்போம்.

  • தும்பை இலையை இவற்றை சரி விகிதத்தில் கலந்து அரைத்து, அதில் விரல் நுனியளவு எடுத்து, பாலில் கலந்து தினமும் சாப்பிட்டுவர, மாத விலக்கு பாதிப்புகள் யாவும் விலகி விடும்.
  • தாய் மார்களின் கருப்பை பாதிப்புகள் நீங்க, தும்பை மலர்களை ஆட்டுப் பாலில் இட்டு காய்ச்சி, அந்தப் பாலை தொடர்ந்து பருகி வர, துன்பங்கள் தந்த கருப்பை பிரச்சனைகள் விலகி, உடல் நலமாகும்.
  • தும்பை இலைச் சாறு மற்றும் துத்தி இலைச் சாறு இவற்றை பாலில் கலந்து பருகி வர, உள் மூலம், வெளி மூலம், இரத்த மூலம் உள்ளிட்ட அனைத்து வகை மூல வியாதிகளும் தீர்ந்து விடும்.
  • குழந்தைகளுக்கு உடல் சூட்டினால் ஏற்படும் மாந்தம், கழிச்சல் மற்றும் வயிற்றுப் பொருமல் குணமாக, தும்பை இலைகளுடன் ஓமத்தை அல்லது ஓமவல்லி இலைகளை அரைத்து, குழந்தைகளுக்கு பருகத்தர, அவையாவும் விலகி, குழந்தைகள் விரைவில் நலமடையும்.
  • தும்பை இலைச் சாற்றை தேங்காய் எண்ணையில் இட்டு காய்ச்சி, ஆறாத காயங்கள் மற்றும் புண்கள் மீது தடவி வர, அவை எல்லாம் விரைவில் ஆறி விடும்.
  • தும்பை இலைகளை பயிற்றம் பருப்புடன் கலந்து கொதிக்க வைத்து, சாப்பாட்டில் முதலில் சாப்பிடும் பருப்பு போல மசித்து சாப்பிட்டுவர, தொண்டை சதை இன்னல்கள் விலகி, பாதிப்புகள் சரியாகும்.
  • தொண்டை பாதிப்பு நீங்க வேறொரு முறையாக, தும்பை இலைகளுடன் தும்பை மலர்கள், திப்பிலி பொடி மற்றும் அக்ரகாரம் எனும் மூலிகை இவற்றை தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வர, தொண்டை சதை வளர்ச்சி குறைந்து, உடல் நலமாகும்.
  • தும்பை இலைகளை தினமும் காலை வேளைகளில் சாறெடுத்து பருகி வர, உடலில் வாயுத் தொல்லை தீரும்.
  • தும்பைச் சாற்றை, நெற்றியின் முன் பக்கம் மற்றும் கழுத்தில் தடவி வர, தலைவலிகள் யாவும் விலகி விடும்.
  • தேள் கொட்டிய வலி வேதனை குறைய, தும்பை இலைச் சாற்றினை சில துளிகள் தேனில் கலந்து பருகக் கொடுத்தபின்னர், தேள் கொட்டிய இடத்தில் தும்பை இலைச் சாற்றைக்கொண்டு நன்கு தேய்த்து வர, விஷம் முறிந்து வலிகள் குறைந்து விடும்.
  • தும்பை இலைகளுடன் கொத்தமல்லி அல்லது கறிவேப்பிலை சேர்த்து துவையல் போல செய்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வர, மலச்சிக்கல்கள் விலகி, உடல் இலகுவாகி, மனம் உற்சாகமடையும்.
  • தும்பை இலைகள் மற்றும் மலர்களை அரைத்து பாலில் கலந்து சூடாக்கி பருகி வர, கண் பார்வைக் குறைபாடுகள் யாவும் நீங்கி விடும்.
  • தலையில் நீர் கோர்த்து தலை பாரம், மூக்கடைப்பு மற்றும் மைக்ரேன் எனும் ஒற்றைத் தலைவலி பாதிப்புகளிலிருந்து மீள, தும்பைப் பூவை பாலில் கலந்து அரைத்து, நல்லெண்ணையில் காய்ச்சி, அந்த எண்ணையை, தலையில் நன்கு தேய்த்து, குளித்து வர, மேற்சொன்ன பாதிப்புகள் யாவும் நீங்கி, உடல் குணமடையும்.
  • நல்லெண்ணையில் தும்பை மலர்களை இட்டு காய்ச்சி, உச்சி முதல் உள்ளங்கால் வரை இந்த எண்ணையை நன்கு தேய்த்து, சற்றுநேரம் உடலில் ஊறிய பின்னர், குளித்து வர, கண்களின் பார்வைத் திறன் நன்கு தெளிவடையும்.
  • தும்பைப் பூச்சாறெடுத்து, அதில் சில துளிகள் சம அளவு தேனுடன் கலந்து தினமும் பருகி வர, உடலின் நற்சத்துக்கள் பற்றாக்குறையால் ஏற்படும் அதீத தாகம், நா வறட்சி மற்றும் உடல் அசதி யாவும் சரியாகி, உடல் நலம் பெறும்.
  • காதுகளில் சீழ் வடிவதை தடுக்க, தும்பை மலர்களை பெருங்காயத் தூளுடன் சேர்த்து, எண்ணையில் காய்ச்சி, அதை காதுகளில் சில சொட்டுகள் தினமும் இட்டு வர, காது சீழ் வடிதல் பாதிப்புகள் யாவும் விரைவில் மறையும்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More