பப்பாளியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. சரும பிரச்சனைகள் இருந்து சிறுநீரக கற்களை போக்கும் வரை இதன் பயன்கள் ஏராளம். பார்ப்பதற்கு பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இதில் விட்டமின் ஏ முதல் ஏராளமான ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன. பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு ஆகியவற்றில் செயல்படுகிறது. ஆனால் சில பக்க விளைவுகளும் இருக்கின்றன. அதனால் அளவோடும் கவனத்தோடும் சாப்பிட வேண்டியது அவசியம்.
கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளது.
பப்பாளி பழத்தின் விதைகள் கருக்கலைப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.
கருப்பை சுருங்கி விரியும் தன்மையை அதிகப்படுத்தும். அதனால் கூடுமானவரை பப்பாளியில் இருந்து கர்ப்பிணிகள் தள்ளி இருப்பது நல்லது.
பப்பாளியை அதிகமாக உண்ணும் போது நமது உணவுக்குழாய் தடைபட வாய்ப்பு உள்ளது. எனவே நீங்கள் தினமும் அதிகமாக பப்பாளி பழத்தை சாப்பிடுவதை தவிருங்கள். சர்க்கரை அளவு குறைத்து விடுகிறது
பப்பாளி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. குறைக்கிறது. இதற்கிடையில் நீங்கள் இரத்த அழுத்த மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வந்தால் இது மிகுந்த தீங்கை விளைவிக்கும்.
நன்கு முழுமையாகப் பழுக்காத பப்பாளியில் உள்ள பால் போன்ற தன்மை சிலருக்கு அழற்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே முடிந்த வரை பழுக்காத பப்பாளியை சாப்பிடுவதை தவிருங்கள்.
உதடுகள், வாய், காதுகள் மற்றும் தொண்டை அரிப்பு, எரியும் உணர்வு ஏற்படுதல், நாவில் வீக்கம் ஏற்படுதல், கண்களில் நீர் வடிதல், முகத்தில் வீக்கம், வாய் மற்றும் நாக்கில் சரும தடிப்புகள்
பப்பாளி விதைகள் ஆண்களின் ஆண்மை தன்மையைப் பாதிக்கிறது. இதனால் உயிரணுக்களின் எண்ணிக்கையும் குறைத்து விடுகிறது.
அதற்காக மலட்டுத் தன்மை ஏற்படும் என்கிற அளவுக்கு யோசிக்கத் தேவையில்லை.. அதேசமயம் பப்பாளியை சாப்பிடவே கூடாது என்ற பொருளும் அல்ல.
ஆரோக்கியமான வாழ்வு