0
- பூண்டு: பூண்டை நசுக்கி நெஞ்சில் தடவலாம், அல்லது தினமும் ஒருமுறை பூண்டை அப்படியே சாப்பிடலாம்.
- மஞ்சள்: மூச்சுத் திணறலை குறைக்கவும், நெஞ்சிலிருந்து சலியை வெளியேற்றவும் மஞ்சள் உதவும். ஒரு கப் சூடான பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து பருகலாம்.
- தேன்: இருமலை குறைக்க தேன் உதவும். நிமோனியா அறிகுறிகள் குறையும் வரை தினமும் நீரில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து பருகலாம்.
- கற்பூர எண்ணெய்: நல்லெண்ணெய் உடன் மூன்று டேபிள் ஸ்பூன் கற்பூர எண்ணெய் கலந்து உறங்கும் முன் நெஞ்சில் தடவிக் கொள்ளலாம்.
- ஆப்பிள்: வைட்டமின் சி அதிகமுள்ள ஆப்பிள்கள் நிமோனியாவை குணப்படுத்த உதவும். நுரையீரலில் வீக்கத்தை குறைக்கவும் ஆப்பிள் உதவும். தினமும் ஆப்பிள் பழம் சாப்பிடலாம் அல்லது ஜூஸ் செய்து செய்து குடிக்கலாம்.
- கீரைகள், சிட்ரஸ் பழங்கள்: கமலாப்பழம், பெர்ரி பழங்கள், கிவி உள்ளிட்ட சிட்ரஸ் பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். நிமோனியாவை குணப்படுத்த கீரைகள் உதவும்.
- காய்கறி ஜூஸ்: கீரை, கேரட், பீட்ரூட் ஆகியவற்றின் ஜூஸ் நிமோனியாவை குணப்படுத்த உதவும்.