வேப்பிலை இலைகளை பத்து நிமிடம் கொதிக்க வைத்து குளிர வைக்கவும். அதை கண் இமைகளில் மற்றும் கண்களை கழுவ வேண்டும்.இவை கண்களை குளிர வைக்கும்.
வெயில் காலத்தில் இப்படி செய்து வந்தால் கண்களுக்கு நல்லது.
இது தசை மற்றும் மூட்டு வலியை நீக்குகிறது.ஒரு கப் தண்ணீரில் இலைகளை வேக வைத்து அதை வடிகட்டி குளிர்விக்கலாம்.
பாதிக்கப்பட்ட இடத்தில் வேப்ப எண்ணெயை வைத்து மசாஜ் செய்யலாம்.
மூட்டு வலிக்கு முடக்கத்தான் இலை, வேப்பிலை இரண்டையும் சேர்த்து அரைத்து முழங்காலில் பற்றுப் போட்டு வந்தால் வலி குணமடையும்.
வேம்பு ஆணி நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. பாதிக்கப்பட்ட இடத்தில் வேப்ப எண்ணெயை பூசி வந்தால் விரைவில் ஆணி நோய் குணமாகும்.
சரும அரிப்பு, சர்க்கரை நோயாளிகளுக்கு இவை சிறந்த மருந்தாக பயன்படுகிறது.