உடலுக்கு முக்கியமான தேவையாக இருப்பதும், உடல் இயக்கங்கள் அனைத்தும் சரி வர இயங்க தேவையானதுமாய் இருப்பதும் இரத்தம் தான். இந்த இரத்தம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்..! ஆனால் பலருக்கு இந்த இரத்தின் அளவானது 4-க்கு கீழ் எல்லாம் கூட இருக்கிறது…
முக்கியமாக கர்ப்பிணி பெண்களுக்கு இரத்தின் அளவானது அதிகமாக இருக்க வேண்டியது மிகமிக அவசியமான ஒன்றாகும். பல கர்ப்பிணி பெண்களை குறி வைத்து தாக்குவதே இந்த இரத்த சோகை தான்… ஹீமோகுளோபின் அளவு உங்களது ரத்தத்தில் குறைந்தால், உங்களுக்கு களைப்பு உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் உண்டாகின்றன…
உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்!
எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.
இந்த ஹீமோகுளோபின் அளவை நீங்கள் இயற்கையாகவும் மிகவும் எளிமையாகவும் தினசரி சாப்பிடும் உணவுகளின் மூலமாகவே அதிகரிக்கலாம். இந்த பகுதியில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உணவுகளை பற்றி காணலாம்.
நன்றி | startamiz