இங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சாவளி பெண்ணின் முகத்தில் வளரும் தாடி-மீசை இங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சாவளி பெண்ணின் முகத்தில் வளரும் தாடி-மீசை

7469fb3ee1429b30189b9d84657b531c

இங்கிலாந்தில் உள்ள பெர்ஷையர் நகரை சேர்ந்த பெண் கர்னாம் கவுர் (23), இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.

11 வயதாக இருந்த போது ‘பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்’ என்ற அதிசய நோய் இவரை தாக்கியது.

இதனால் அவரது முகத்தில் தாடி, மீசை முளைக்க தொடங்கியது. பள்ளிக்கு சென்ற போது உடன் படித்த சகமாணவிகள் கேலி, கிண்டல் செய்தனர். இதனால் அவர் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டார்.

வீட்டில் இருந்த படியே கல்வி கற்க தொடங்கினார். தொடக்கத்தில் முகத்தில் மட்டும் வளர்ந்த முடி ஆண்களை போன்று கை, கால், மார்பு உள்ளிட்ட உடலில் அனைத்து பகுதிகளிலும் வளர தொடங்கியது.

இதனால் அவர் ஆணாக முடியாமலும், பெண்ணாக வாழ முடியாமலும் தவித்துக் கொண்டிருக்கிறார். வாரத்துக்கு இருமுறை ’ஷேவிங்’ (சவரம்) செய்து முடிகளை அகற்றி வந்தார்.

அதுவே அவருக்கு மிகப் பெரிய வேலையாக இருந்தது. எனவே, ஒரு கட்டத்தில் சவரம் செய்வதை நிறுத்தி விட்டார்.

தனது 16 வயதில் சீக்கிய மதத்துக்கு மாறினார். அதன் மூலம் மத சம்பிரதாய படி தாடி மற்றும் மீசையை அகற்றுவதில் இருந்து விலக்கு பெற்றார். எனவே, தொடர்ந்து, தாடி, மீசை வளர்த்து வருகிறார்.

தொடக்கத்தில் இவரது முடிவுக்கு குடும்பத்தினரும், உறவினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், பெற்றோரும், சகோதரரும் ஆதரவு அளித்தனர்.

இது குறித்து கர்னாம் கவுர் கூறும் போது, ‘‘முகம் மற்றும் உடலில் முடி வளருவது கடவுள் எனக்கு அளித்த வரமாக கருதுகிறேன். இதை எதிர்த்து எதற்காக போராட வேண்டும் என முடிவு செய்து விட்டேன்.

தற்போது சீக்கிய மதத்துக்கு மாறி முடியை முழுவதும் வளர்த்து வருகிறேன். நானும் ஒரு சராசரி பெண்தான். எனக்கும் உணர்வுகள் இருக்கின்றன. ஆனால், என்னைப் பார்க்கும் ஆண்கள் விலகிச் செல்கிறார்கள். இது எனக்கு கவலையாக உள்ளது’’ என்றார்.

ஆசிரியர்