ஹிந்தி தெரியாத பொலிசாரின் விசாரணைக்காக காத்திருக்கும் சடலம்!ஹிந்தி தெரியாத பொலிசாரின் விசாரணைக்காக காத்திருக்கும் சடலம்!

unnamed

வவுனியா ஏ9 வீதியில் சாந்தசோலை அருகில் இன்று மாலை(24) 3 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியை ஒருவர் மரணமடைந்துள்ளார்.

வவுனியா குட்செட் வீதியில் வசித்து வரும் ஒரு வயது குழந்தையின் தாயாகிய அகிலன் சுகன்யா என்ற 36 வயது பெண்ணே மரணமடைந்தவராவார். வவுனியா வடக்கு புதிய சின்னக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த குறித்த ஆசிரியர் பாடசாலை முடிந்து வீடு வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த ஐகொன் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான டிப்பர் மோதியதால் குறித்த ஆசிரியர் மரணமடைந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த வாகனச் சாரதியான இந்திய நாட்டைச் சேர்ந்தவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளைத் தெரியாது எனவும் ஹிந்தி மட்டுமே தெரியும் எனவும் கூறுவதால் வவுனியா பொலிசார் ஹிந்தி தெரியாமையால் விசாரணை செய்ய முடியாது அவலப்படுவதாக தெரியவருகிறது. அத்துடன் இறந்த ஆசிரியையின் சடலத்தையும் ஒப்படைக்கவில்லை. விசாரணைக்காக வாக்கு மூலம் பெறும் மட்டும் வவுனியா வைத்தியசாலையிலேயே குறித்த ஆசிரியையின் சடலம் வைக்கப்பட்டுள்ளது. இறந்த பின் கூட சடலத்தை வைத்து தாமதப்படுத்துவதால் உறவினர்கள் விசனம் அடைந்துள்ளனர்.

 

ஆசிரியர்