மலேசிய விமானம் கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டதுமலேசிய விமானம் கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது

மலேசிய ஏயர்லைன்சுக்கச் சொந்தமான பயணிகள் வானூர்தி நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து கோலாலம்பூர் நோக்கிப் பறந்து கொண்டிருந்த போது அது உக்ரைய்ன் வான்பரப்பில் வெடித்துச் சிதறி வீழ்ந்து நொருங்கியுள்ளது. இந்த வானூர்தி 295 பேருடன் பறந்து கொண்டிருந்ததாகவும், அது உக்ரைய்ன் வான்பரப்பில் தொடர்பை இழந்து போனதெனவும் மலேசிய ஏயர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரசிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் உக்ரைய்ன் படையினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்று வரும் பகுதியில் இந்த வானூர்தி விழுந்து நொருங்கியுள்ளது. இதனை ஏவுகணை தாக்குதல் மூலம் வீழ்த்தியிருக்கலாம் என உக்ரைய்ன் செய்திகளை ஆதாரம் காட்டி பன்னாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். வானூர்த்தியில் பறந்த 295 பேரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

ஆசிரியர்