பாராளுமன்றத்தை கலைக்கும் தீர்மானத்தை இரத்து செய்யுமாறு எஸ்.பி.திசாநாயக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கவுள்ள பிரேரணையொன்று தொடர்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க இந்த விடயம் தொடர்பில் தெளிவூட்டினார்.
அரசாங்கத்தைக் கலைத்து தேர்தலை நடத்தும் எண்ணத்தைக் கைவிடுமாறு நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோருகின்றோம். 120,122,123 பேர் எம்முடன் இணைய வந்தனர். அரசாங்கம் கலைக்கப்பட்டபோது உறுப்பினர்கள் தப்பி ஓடினர்.
பாராளுமன்றத் தேர்தலை 2020 ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்துவோம். தேர்தலுக்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானியை 7 ஆம் திகதிக்கு பின்னர் இரத்து செய்வதில் சிக்கலொன்று காணப்படலாம். எனினும் தீர்வை வழங்க முன்னரும் அந்த வர்த்தமானியை இரத்து செய்து, தேர்தலை இரத்து செய்வதற்கு ஜனாதிபதிக்கு பூரண அதிகமுண்டு.