10
சர்வதேசத்தின் விமர்சனங்களைத் தோடும் வகையில், வர்த்தக ரீதியிலான திமிங்கல வேட்டையை மீண்டும் அராம்பிக்கவுள்ளதாக, ஜப்பான் தெரிவித்துள்ளது.
அதேநேரம், சர்வதேச திமிங்கல பாதுகாப்பு ஆணைக்குழுவில் இருந்து விலகவுள்ளதாகவும், ஜப்பான் அறிவித்துள்ளது. இந்தநிலையில், 1986 ஆம் ஆண்டு சர்வதேச திமிங்கல பாதுகாப்பு ஆணைக்குழுவினால், திமிங்கல வேட்டை தடை செய்யப்பட்டது.
சில கடல்வாழ் உயிரினங்கள் அழிவை எதிர்நோக்கியத்தைத் தொடர்ந்து, வர்த்தக ரீதியிலான திமிங்கல வேட்டைக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், 1951 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச திமிங்கில பாதுகாப்பு ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் ஜப்பான், திமிங்கலங்களை உணவாக உட்கொள்ளும் நடைமுறை நாட்டின் கலாசாரத்தில் ஒரு அங்கம் என தெரிவித்தது.
அறிவியல் ஆய்வுக்காக திமிங்கலங்களை வேட்டையாடுவதாக தெரிவித்து ஜப்பான் இறைச்சி விற்பனையில் ஈடுபட்டிருந்தது. ஜப்பானின் இந்த நடவடிக்கை வெகுவாக விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.