செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய தளபதி கோத்தா மகிந்தவுடன்

விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய தளபதி கோத்தா மகிந்தவுடன்

2 minutes read

சனநாயக போராளிகள் கட்சி என்ற பெயரில் இயங்கி வரும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை சிறியளவில் உள்ளடக்கிய கட்சியின் உறுப்பினர்கள் பொதுஜன பெரமுன கட்சியின் சனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ச அவர்களையும்,பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களையும் மிக இரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இச்சந்திப்பு கடந்த வாரம் மிகவும் இரகசியமான இடமொன்றில் நடைபெற்றுள்ளது.
சனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்களான துளசி,கதிர்,வேந்தன் மற்றும் கவியரசன் ஆகியோர் உள்ளடங்கிய குழுவினரே இச் சந்திப்பை நடத்தியுள்ளனர்.
இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் மீதான படுகொலைகள்,காணாமல் போதல் மற்றும் பாலியல் கொடுமைகளை அரங்கேற்றியது தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மகிந்த-கோத்தபாய சகோதரர்களை சந்தித்து உறவாடியது தொடர்பில் முன்னாள் போராளிகளும், தமிழ் தேசிய உணர்வாளர்களும் தமது கடுமையான அருவருப்புடனான அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்களினதும், முன்னாள் போராளிகளினதும் நலன்களைப் பேரம்பேசும் பொருளாக்கி தனிப்பட்ட பலன்களைப் பெறுவதே இச் சந்திப்பின் நோக்கமாக இருந்துள்ளதுடன் பெருமளவு பணம் கை மாறியுள்ளதற்கான வாய்ப்புகளும் இருந்துள்ளன.இவர்களை மக்கள் முன்னரும் கோத்தபாயவின் கைகூலிகள் என்று கூறி வருவது குறிப்பிடத்தக்கது!
இந்த சந்திப்பிற்கான ஏற்பாடுகளை, தற்போது நியூசிலாந்து நாட்டில் வசிக்கும் விடுதலைப் புலிகளின் முன்னை நாள் மணலாறு மாவட்டத் தளபதியாகவும் பின்னர் நிதித்துறை முக்கியஸ்தராகவும் இருந்த ஒருவர் மேற்கொண்டதாக அறியமுடிகின்றது..

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More