கோத்தாபய ராஜபக்ஷ இரவு நேரங்களில் வீட்டிற்கு வர முயற்சிக்கும் தலைவர் இல்லை எனவும், கடினமான சவால்கள் பலவற்றை எதிர்கொண்டவர் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
ஹிங்குராங்கொட பகுதியில் நேற்று (Oct.27) இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
விவசாயிகளுக்கு இலவசமாக உரமானியம் வழங்கும், விவாசாயிகளின் மேம்பாட்டிற்கு நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும், விவசாயிகளை வியாபாரிகளாக மாற்றுதல் போன்ற விடயங்கள் கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனத்தில் உள்ளடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
கோத்தாபய ராஜபக்ஷ கடினமான சவால்கள் பலவற்றை எதிர்கொண்டவர் எனவும் குறிப்பாக புலிகளை தோற்கடிக்கும் பொறுப்பையும் மஹிந்த ராஜபக்ஷ கோத்தாபய ராஜபக்ஷவுக்கே வழங்கியதாகவும் அதனை அவர் உரிய வகையில் நிறைவேற்றியதாகவும் விமல் வீரவங்ச கூறினார்.
வெளிநாட்டில் வாழ்ந்தவர் என புலனாய்வு பிரிவினர் அவரை கைது கைது செய்த பின்னரும் அவர் தனது பணியை முடிந்தாகவும் அந்த வகையில் அவர் பொறுப்புகளை உரிய வகையில் நிறைவேற்றும் தலைவர் எனவும் விமல் வீரவங்ச கூறினார்.
கோத்தாபய ராஜபக்ஷ இரவு நேரங்களில் வீடுகளுக்கு வர முயற்சிக்கும் தலைவர் இல்லை எனவும், அவர் மாத்திரமே கிராமத்தில் கட்சி சாராத வேட்பாளர் எனவும் கூறினார்.
அதேபோல் பொலன்னறுவை மாவட்டத்தை கோட்டாபய ராஜபக்ஷ அதிகூடிய வாக்குகளை பெற்று வெற்றி பெறும் மாவட்டமாக மாற்றியமைக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.