திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சுஜித் மரணத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயல்வது கண்டிக்கத்தக்கது என பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
தே.மு.தி.க. வலுவான இயக்கமாக உள்ளது. உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்ள தயார் நிலையில் உள்ளோம். தேர்தல் நடக்கும்போது தே.மு.தி.க. சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி திருப்தியான இடங்களை பெறுவதற்கு முயற்சி செய்வோம்.
மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்து மரணமடைந்த சிறுவன் சுஜித் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க ஆழ்துளை கிணறு அமைக்கும் உரிமையாளர்கள் ஆழ்துளை கிணறுகளை மூடி நம்முடைய குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். மேலும் மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றி நன்மை தரும்படி மாற்றி அமைக்க வேண்டும்.
அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்தர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.