புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தமிழ் மக்களின் சிந்தாந்தமே புலிகளினது சித்தாந்தம்; அதுவே கூட்டமைப்பின் சித்தாந்தம்

தமிழ் மக்களின் சிந்தாந்தமே புலிகளினது சித்தாந்தம்; அதுவே கூட்டமைப்பின் சித்தாந்தம்

1 minutes read
சபா குகதாஸ்க்கான பட முடிவுகள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் சித்தாந்ததையே தமிழ் தேசியக் கூட்ட்டமைப்பினர் முன்னெடுத்துவருகின்றனர். எனினும் அதில் தமிழ் மக்களுக்கு எவ்வித விருப்பமும் இல்லை என பாதுகாப்பு  செயலர் கமால் குணரட்ன தெரிவித்துள்ள கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தமிழரின் அடிப்படை சித்தார்த்த கோரிக்கைகளை கொச்சப்படுத்துகின்றார் என குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்இ

சாம்பியா நாட்டு இராணுவத் தளபதிக்கும் இலங்கை பாதுகாப்பு  செயலாளருக்கும் இடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பில் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ன தமிழ்த் தேசிய கூட்ட்டமைப்பினர் தமிழீழ விடுதலைப்புலிகளின் சித்தார்த்தத்தை நிறைவேற்றும் நோக்கிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் உண்மையில் பாதிக்கப்பட்ட் மக்களுக்கு அதில் எவ்வித விருப்பங்களும் இல்லை என்ற கருத்தை வெளியிட்டுள்ளார். அவரின் இந்த கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது.இது தமிழரின்  அடிப்படை சித்தார்ந்த உரிமைகளை கொச்சசைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் சித்தார்த்தத்தை தான் முன்னெடுத்தார்களே தவிர புலிகளின் சித்தார்நத்தம் என்று எதுவும் முன்வைக்கப்படவில்லை.தமிழ் மக்களின் விடுதலைப் போராடடம் ஆரம்பிக்கப்பட முன்னர் அகிம்சை போராடடத்தை முன்னெடுத்திருந்தனர். அது கொச்சப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்படடமையினால் ஆயுத போராடடம் தொடங்கியது.

தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைகள் தொடர்பாக பொது மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். சூடான் பிரித்தானிய போன்ற நாடுகளில் அவ்வாறு நடைபெற்று ஒவ்வொரு அலகுகள் பிரிந்துள்ளன.போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளவர்களில் முக்கியமானவர்கள் ஒருவராக இருக்கும் தற்போதைய பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ன தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளை கொச்சப்படுத்தும் வகையில் கருத்துக்கள் வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.

2001 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பினருக்கே ஆதரவினை வழங்கி வருகின்றனர். தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளை கொள்கையாக கொண்டு பயணிக்கும் கூட்ட்டமைப்பினர் அதனை பெற்றுக்கொள்ளும் பயணத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

அதற்காக முள்ளிவாய்க்காலில் போரை முன்னின்று நடத்திய முக்கிய படைத்தளபதியாக இருந்த கமால் குணரட்ன தமிழர்களின் அபிலாசைகளை கொச்சப்படுத்துவது கண்டனத்துக்குரியதாகும்.என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More