உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் கடுமையாக குறைவடைந்துள்ளமையை அடுத்து அதன் நன்மைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று கூறி வந்த அரசாங்கம் தற்போது மாற்று திட்டமொன்றை அறிவித்து மக்களை ஏமாற்றியுள்ளது.
உலக சந்தையில் எரிபொருட்களின் விலையில் ஏற்பட்ட குறைவை அடுத்து இலங்கையில் எரிபொருட்களின் விலையை குறைக்காமல் அதற்கு பதிலாக அதன் பயன்களை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிடப்போவதாக போக்குவரத்து , மின்சசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும்,
வழமையாக உலக சந்தையில் எரிபொருட்களின் விலையில் ஏற்படும் குறைவு பொதுமக்கள் அனைவருக்கு சென்று சேர்வதில்லை.
எனவேதான் இந்த தடவை இந்த நன்மை பாரியளவு மக்களை சென்றடையும் வகையில் இந்த முடிவை மேற்கொண்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வணக்கம் இலண்டனுக்காக
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்