வாழும் போது
வளரவும் – நீங்கள்
வாழ்ந்த பின்னர்
நிலைக்கவும் முடியும்.
சேர்த்து வைத்த
செல்வம் என்றும்;
சேர்ந்து கொண்ட
சொந்தம் என்றும்;
ஈழத் தமிழர்
வாழ்வை எழுத்தில்
பதித்த கவிஞர்
நீங்கள் பொருந்தும்.
பிறந்த மண்ணில்
வாழ்ந்து வாழும்
மகத்துவம் பெற்றவர்
தலைவனின் முத்து.
ஈழத் தமிழரின்
பெரும் சொத்து.
தீபச் செல்வன்.
போரின் போரிடுகிறார்.
எழுதுகோள் ஏந்தி
எதிரியை எதிர்த்து
மோதிச் செல்லும்
வீர மறவர் அவர்.
உண்மை சொல்லி
சுடு மணல் மீது
வெறுங்கால் வைத்து
நின்று வாதாடுகிறார்.
கிடைக்கும் ஒரு
வாய்ப்பும் பயனாகும்.
விட்டதில்லை அவர்
தொட்ட கொள்கை.
பட்டொளி வீசி
பாட்டொலி கேட்கும்
சந்ததி ஒன்று
அவர் வழியில்.
காலத்தின் நல்ல
கண்ணாடி ஆகி
தேசத்தின் நல்ல
ஆன்மா ஆவார்.
வாழ்த்தி மகிழ்ந்து
போற்றி புகழ்ந்து
கொண்டாடத் தகும்
ஆற்றலோன் பாரில்.
ஐப்பசி 24 இல்
மண்ணில் பிறந்த
தேசத் துயர் பாடும்
கவிக்கு வாழ்த்துகள்.
நதுநசி