பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்ட அரீமா நஸ்ரின் (36 வயது) என்ற பெண் தாதி மரணமடைந்துள்ளார்.
கொரோனா தொற்று ஏற்பட்டு மரணமடைந்த இவர் நல்ல உடல் ஆரோக்கிய நிலையில் இருந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவின் West Midlands இல் உள்ள Walsall Manor வைத்தியசாலையில் இவர் கடந்த 16 வருடங்களாகப் பணியாற்றிவந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 16ம் திகதி கொரோனா தொற்று அறிகுறி ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டிருந்தார். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் விடுமுறையில் நின்ற காலப்பகுதியிலேயே இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கச் சந்தர்ப்பம் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர் 3 பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.