இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த செய்ய வேண்டிய சகல நடவடிக்கைகளையும் சுகாதாரத் துறையினர் முன்னெடுத்தாலும் கூட அடுத்துவரும் நாட்கள் மோசமாக இருக்கும்.
புத்தாண்டு வரையிலும் இலங்கையின் நிலைமையைச் சரியாக அறிவிக்க முடியாது. எனவே, மக்கள் அனைவரும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். அவர்கள் வீடுகளுக்குள் இருப்பதே சிறந்த வழி என இவ்வாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இப்போது வரையிலும் இலங்கையில் கொரோனா தொற்றுப் பரவல் நிலைமைகளை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிந்துள்ளது. ஆனால், நாளாந்தம் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலைமையில் அடுத்த ஒருவார காலம் மிகவும் கடினமான – மோசமான வாரமாக அமையும். நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. அவ்வாறு இருக்கையில் எதிர்வரும் புத்தாண்டு வரையில் மிகக் கடினமான சுகாதார செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது.