தியாகி பொன். சிவகுமாரன் நினைவுநாளை முன்னிட்டு தமிழ் தேசிய வானொலி கட்டுரைப் போட்டி ஒன்றை நடாத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. முதல் பரிசாக முப்பதாயிரம் ரூபாவும் இரண்டாவது பரிசாக 20ஆயிரம் ரூபாவும் முன்றாவது பரிசாக 10ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
பரிசு பெறும் கட்டுரைகளுடன் பிரசுரத்துக்கு தேர்வாகும் கட்டுரைகளுக்கு 2500ரூபா விகிதம் வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் ஜூன் 03ஆம் திகதிக்குள் போட்டிக்கான கட்டுரைகளை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தமிழ் தேசிய வானொலி அறிவித்துள்ளது.
போட்டி விபரம் இதோ!
தியாகி பொன். சிவகுமாரன் நினைவுக் கட்டுரைப் போட்டி 2020
மாவீரன் தியாகி பொன். சிவகுமாரன் நினைவுநாளை (ஜூன்05) முன்னிட்டு, தமிழ் தேசிய வானொலி திறந்த கட்டுரைப் போட்டியொன்றை நடாத்தவுள்ளது. உலகமெங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழ் உறவுகள் வயதெல்லையின்றி இந்தப் போட்டியில் பங்கு பெறலாம்.
பரிசுகள்
முதல் பரிசு – முப்பதாயிரம் (இலங்கை ரூபா)
இரண்டாம் பரிசு – 20 ஆயிரம் (இலங்கை ரூபா)
மூன்றாம் பரிசு 10 ஆயிரம் (இலங்கை ரூபா)
விதிகள்
01. கட்டுரை தமிழ் மொழியில் அமைந்திருத்தல் வேண்டும்.
02. கட்டுரைகள் 1000 முதல் 1500 சொற்களுக்குள் அமைந்திருத்தல் வேண்டும்
03. கட்டுரையை ஒருவரே எழுத வேண்டும். ஒன்றிற்கு மேற்பட்ட குழுவினரால் எழுதப்பட்டிருக்கக் கூடாது.
04. ஒருவர் ஒரு கட்டுரையை மாத்திரமே அனுப்பலாம்
05. போட்டியாளர் தமது சுயவிபரத்தை அனுப்புதல் வேண்டும் (புனைபெயர், சொந்தப்பெயர், தொலைபேசி இலக்கம், முகவரி, மின்னஞ்சல் முகவரி)
06. கட்டுரைகள், “ஈழத் தமிழருக்கான அரசியல் தீர்வினை எட்டுதல்” என்ற விடயப்பரப்பினை பற்றியதாக இருத்தல் வேண்டும். கட்டுரைக்கு ஏற்ப போட்டியாளர் தலைப்பினை சூட்டிக்கொள்ளலாம்.
07. கட்டுரையானது, போட்டியாளரின் சொந்த எழுத்துப் படைப்பாக இருத்தல் வேண்டும். அதற்கான உறுதிமொழி தனிக்கடிதமாக இணைக்க வேண்டும்.
08. கட்டுரைகளின் பதிப்புரிமை தமிழ் தேசிய வானொலிக்கே உரித்துடையது. தமிழ்தேசிய வானொலி இணையத்திலோ, அல்லது புத்தகமாகவே வெளியிட உரிமை உண்டு.
09. பரிசு பெறும் கட்டுரைகளை தவிர்த்து, பிரசுரத்திற்கு எடுக்கப்படும் கட்டுரைகளுக்கு 2500ரூபா விகிதம் வழங்கப்படும்
10. கட்டுரைகளை மின்னஞ்சல் முகவரி ஊடாகவே அனுப்பலாம். அனுப்ப வேண்டிய முகவரி: Info@tnrfm.com
11. கட்டுரைகளை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி 03.06.2020
கட்டுரைப் போட்டி முடிவும் தமிழ்த் தேசிய வானொலி இணையதளத்தில் ஜூன் 05 அன்று, மாவீரன் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவு தினமன்று வெளியிடப்படும். முதல் மூன்று கட்டுரைகளும் அன்றைய நாளில் வெளியிடப்படுவதுடன் ஊடகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
நன்றி
தமிழ்த் தேசிய வானொலி
சிட்னி
அவுஸ்ரேலியா