ஈரான் நாட்டு குர்து படை கமாண்டர் குவாசிம் சுலைமானி கடந்த ஜனவரி 3- ந் தேதி டெகரான் விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். அமெரிக்க அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் குவாசிம் பலியானார். ஈரான் நாட்டில் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
‘சுலைமானி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அமெரிக்கா தகுந்த விலையை கொடுக்க நேரிடும்” என்று ஈரான் கடுமையாக எச்சரித்திருந்தது. சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்க ஜனவரி 8- ந் தேதி ஈராக் நாட்டிலுள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீத ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஆனாலும், பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்த முடியவில்லை.
இதறகிடையே , குவாசிம் சுலைமானி குறித்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ மற்றும் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டுக்கு முக்கியத் தகவல்களை கொடுத்ததாக மக்முத் மவுசாவி மஜ்த் என்பவரை ‘ஈரான் போலீஸ் கைது செய்திருந்தது. அவரிடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் குவாசிம் சுலைமானி குறித்த தகவல்களை உளவு அமைப்புகளுக்கு அளித்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மக்முத் மவுசாவி மஜ்த்தை தூக்கிலிட முடிவு செய்திருப்பதாக ஈரான் நாட்டு நீதித்துறை செய்தி தொடர்பாளர் கோலாம்ஹூசைன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.