ரத்த தானம் மிகவும் சிறந்த தானமாக கருதப்படுகின்றது. ரத்தம் பெறுபவருக்கு மட்டுமில்லாமல், அதை கொடுப்பவருக்கும் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜூன் 14ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச ரத்த தான தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. கடந்த 2004ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த ரத்த தான தினம், ரத்தம் தானம் செய்ய வேண்டியதன் அவசியமும், பாதுகாப்பான ரத்த பரிமாற்றம், ரத்தத்திலிருந்து உருவாக்கப்பட்டும் உடலுக்கு தேவையான பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடைப்பிடிக்கப்படுகின்றது.
இளைஞர்கள் சமூகம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டி வரும் அதே வேளையில், பல அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சரியாக பரிசோதனை செய்யப்படாத இரத்தத்தை ஏற்றியதன் மூலம் கர்ப்பிணிகளுக்கும், சிகிச்சை பெற சென்றவர்களுக்கு எய்ட்ஸ் பரவியது உறுதி செய்யப்பட்ட செய்திகள் வருகின்றன.
இது போன்ற மோசமான மருத்துவ சிகிச்சை தடுக்கும் வகையில் தான் உலக ரத்த தான தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.