புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கருணாவுக்கு எதிராக நடவடிக்கை என்பது பிழையான ஒன்று! – அனந்தி

கருணாவுக்கு எதிராக நடவடிக்கை என்பது பிழையான ஒன்று! – அனந்தி

1 minutes read

கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என்பது இனம் தன்னை பாதுகாப்பதற்காக நடத்திய ஆயுதப்போராட்டத்தை பிழையாக காட்டுவதாகும் என அனந்தி சசிதரன் தெரிவித்தார்..

யாழில் நேற்று நடைபெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என்பது புனர்வாழ்வு பெற்ற, பெறாத அல்லது ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவளித்த எல்லோருடைய மனங்களையும் கலங்கடிக்கும் நிலையை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கருணா கடந்த காலங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஒரு தளபதியாக இருந்தார்.

அவருடைய துரோகம் ஒரு இனம் அழிவதற்கு வழிகோலிவிட்டது. அதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் விடுதலைப்புலிகளின் காலத்தில் கருணா தளபதியாக இருந்து, 3000 இராணுவத்தை கொன்றேன் என கூறியதற்கு நடவடிக்கை எடுப்பது என்பது ஒரு இனம் தன்னை பாதுகாப்பதற்கு ஆயுதம் ஏந்தியதை பிழையாக காட்டுவதாக பார்க்கலாம் என்று அனந்தி குறிப்பிட்டார்.

மக்களை பாதுகாக்கவே புலிகள் ஆயுதங்களை ஏந்தினார்கள். ஸ்ரீலங்கா பாதுகாப்பு படைக்கு எதிராக யுத்தத்தை நடத்தினார்கள்.

கடந்த காலத்தில் இராணுவத்தை கொன்றதற்காக தற்போது நடவடிக்கை எடுப்பது என்பது பிழையான ஒன்று எனவும் அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More