முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் (கருணா) விசாரணை மேற்கொள்வதற்காக குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று அம்பாறை மற்றும் மட்டக்களப்பு நோக்கி சென்றுள்ளது.
கருணா தெரிவித்த சர்ச்சைக்குரிய கூற்று தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக இன்று குற்ற விசாரனை பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் சுகயீனம் காரணமாக இன்று வர முடியாது என தனது சட்டத்தரணி ஊடாக கருணா குற்ற விசாரணை பிரிவுக்கு அறிவித்திருந்தார்.
இந்நிலையில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளும் வகையில், குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை நோக்கி சென்றுள்ளனர்.
ஒரே இரவில் 3000 இராணுவத்தினரை தான் கொலை செய்ததாக கருணா வெளியிட்ட கூற்று தொடர்பில் உடனடியாக விசாரணையை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்னவினால் குற்ற விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.