0
கொழும்பு டி சொய்சா பெண்கள் வைத்தியசாலையில் பெண்ணொருவர் 5 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
இன்று (28) காலை இந்த பிரசவம் இடம்பெற்றது.
கம்பஹாவை சேர்ந்த 29 வயதான பெண்ணொருவரே குழந்தைகளை பிரசவித்தார். ஐந்து குழந்தைகளும் பெண் குழந்தைகளே.
தாயும், சேய்களும் நலமாக இருப்பதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் சகரிகா கிரிவந்தெனிய தெரிவித்துள்ளார்.
மகளிர் மருத்துவமனையில் ஒரு தாய் இரட்டையர்களைப் பெற்றெடுத்துள்ளார்.