மத்திய அமெரிக்காவின் எல் சல்வடோரில் உள்ள Cuscatlan விளையாட்டு அரங்கத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.
நேற்று (20 ) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சுமார் 100 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உள்ளூர்க் கால்பந்துப் போட்டியைக் காண ரசிகர்கள் கூட்டம் திரண்டநிலையில் அவர்கள் மீது, அங்குள்ள கதவு ஒன்று விழுந்ததாக நம்பப்படுகிறது.
அதன் காரணமாகக் கூட்ட நெரிசல் ஏற்பட்டதுடன், காயமுற்ற இருவர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
சம்பவத்தை அடுத்து, நூற்றுக்கணக்கான பொலிஸ் அதிகாரிகளும் இராணுவ வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அவர்கள், மக்களை அரங்கத்திலிருந்து அதிகாரிகள் வெளியேற்றியதால் கால்பந்து ஆட்டம் நிறுத்தப்பட்டது.
சம்பவம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்றும் அந்நாட்டின் ஜனாதிபதி கூறியுள்ளார்.