0
இலங்கைக்கான ரஷ்யா தூதுவர் லெவன் எஸ்.ட்ஜகார்யன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்துக்கு மரியாதை நிமிர்த்தம் வருகை தந்த ரஷ்யா தூதுவர், கிழக்கு மாகாணத்தின் சமீபத்திய அபிவிருத்திகள் குறித்து ஆளுநருடன் கலந்துரையாடினார்.
இதன்போது கிழக்கு மாகாணத்துக்கு வருகை தரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்துத் தருவதாக கிழக்கு ஆளுநரிடம் ரஷ்யா தூதுவர் உறுதியளித்தார்.