செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் திரையரங்கு வந்து படம் பார்த்தால்தான் உங்கள் எதிர்பார்ப்பை அறிந்துகொள்ளமுடியும் – ஜனா கே சிவா திரையரங்கு வந்து படம் பார்த்தால்தான் உங்கள் எதிர்பார்ப்பை அறிந்துகொள்ளமுடியும் – ஜனா கே சிவா

திரையரங்கு வந்து படம் பார்த்தால்தான் உங்கள் எதிர்பார்ப்பை அறிந்துகொள்ளமுடியும் – ஜனா கே சிவா திரையரங்கு வந்து படம் பார்த்தால்தான் உங்கள் எதிர்பார்ப்பை அறிந்துகொள்ளமுடியும் – ஜனா கே சிவா

5 minutes read

gzfgஆறுமாத காலத்துக்கும் மேலான உழைப்பிற்கு பின்னர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் திரைக்கு வரவிருக்கிறது “கோன்” முழுநீள திரைப்படம். ”கோன்” எதைப்பற்றி பேசுகிறது? எங்கெல்லாம் வெளியாகிறது, எப்போது வெளியாகிறது போன்ற தகவல்களை தெரிந்து கொள்வதற்காக திரைப்படத்தின் இயக்குனர் ஜனா கே சிவாவை தொடர்புகொண்டோம். அவர் ஈழத்திரைக்கு பிரத்தியேகமாக வழங்கிய தகவல்கள் இதோ.

 

“கோன்” திரைப்படம் எதை பற்றி பேசுகிறது?

நான்கு உயர்தர கல்வி பயிலும் மாணவர்கள் தமது சிறுவயது ஆசைகளை நிறைவேற்ற ஒரு வழியை தேர்ந்தெடுக்கிறார்கள். அது எத்தகைய வழி, அதன் மூலம் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அந்த வழியை தெரிவுசெய்ததனால் அவர்களுடைய வாழ்க்கை எப்படி பாதை மாறுகிறது என்பதை சர்வதேச சமூகத்தில் நடக்கும் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து கோன் திரைப்படத்தை எடுத்திருக்கிறோம்.

 

திரைப்பட படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஷ்யமான விடயங்கள்,  நீங்கள் எதிர்நோக்கிய கஷ்டங்கள்?

ஆறுமாதகால திட்டமிடலுடன் 12 நாளில் படப்பிடிப்பை முடித்திருந்தோம். எங்களுக்கு பெரிய கஷ்டமாக இருந்தது நேரம் மட்டும்தான். சில படப்பிடிப்பு தளங்களில் குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாகவே படப்பிடிப்பை முடிக்கவேண்டியதாக இருந்தது. பலவேளைகளில் நித்திரை இல்லாமல் வேலைகளில் ஈடுபடவேண்டியிருந்தது. ஆனால் இவற்றைவிட புதிய லொகேஷன்கள், கலைஞர்களின் உற்சாகம் ஆகியவ மிகுந்த உற்சாகத்தையும், சுவாரஷ்யத்தையும் கொடுத்தது.

 

கோன் திரைப்படம் வெளியிடப்படும் இடங்கள், காலம்?

டொரண்டோ ப்ரீமியர் – ஓகஸ்ட் மாதம் 9 ம் திகதி மாலை 7 மணிக்கு யார்க் சினிமா 115 York Blvd,Richmond Hill, Ontario L4B 3B4  என்னும் இடத்தில்

பிரான்ஸ் ப்ரீமியர் காட்சி : தடம் மற்றும் Green Clouds Pictures ஆதரவில் 133 avenue des champs elysees 75008 paris M 1 george V என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது.

இவற்றை தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் சென்னையிலும் திரையிடப்படவுள்ளது.

 

திரைப்படத்தின் இயக்குனராக, ரசிகர்களிடம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

நான் எமது மக்களுக்காகத்தான் படம் எடுக்கிறேன்.. உங்கள் ரசனைகளை நாங்கள் புரிந்துகொண்டு உங்களுக்கு ஏற்றமாதிரி படங்கள் ஈழசினிமாவில் இருந்து வரவேண்டும் என்றால் நீங்கள் கண்டிப்பாக திரையரங்கு வந்து படம் பார்க்கவேண்டும். அப்போதுதான் உங்களுடைய எதிர்பார்ப்பை எங்களால் அறிந்துகொள்ளவும், அதுக்கேற்ற படைப்புகளை கொடுக்கவும் முடியும். எங்களது திறமைகளையும் வெளிப்படுத்தமுடியும்.

கோன் திரைப்படம் வெற்றியடைய ஈழத்திரையின் வாழ்த்துக்கள்.

 

நன்றி | ஈழத்திரை இணையம் 

 

2X1A7065 IMG_5530 GGGGG 2X1A5494 IMG_8986 kkkk 10491104_693836617377883_484111858991606333_n

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More