ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, 39 ஆண்டுகால சாதனையை தகர்த்தார். அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில், இந்திய அணி வென்றது.
பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் மூன்றாவது பாக்சிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடக்கிறது.
இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி ரன்கள் எடுத்த 8 ரன்கள் 435 பின்தங்கியிருந்தது. இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி, பும்ரா வேகத்தை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பும்ரா 6 விக்கெட் கைப்பற்றினார். இந்நிலையில் சர்வதேச டெட்ஸ் கிரிக்கெட்டில் அறிமுகமான ஆண்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் பும்ரா (45 விக்கெட்) முதலிடம் பிடித்தார்.
முன்னதாக கடந்த 1979 இல் திலீப் தோசி, அறிமுகமான ஆண்டில் 40 விக்கெட் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. இதனை பும்ரா இன்று தகர்த்தெறிந்தார்.