இங்கிலீஷ் பிரிமியர் லீக் காற்பந்து தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் ஆர்சனல் மற்றும் மென்செஸ்ட்டர் யுனைட்டட் அணிகள் மோதிக்கொண்டன.
இந்த போட்டியில் இரு அணிகளும் எவ்வித கேல்களையும் அடிக்காதமையினால் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
இதேவேளை மற்றுமொரு போட்டியில் எவர்ட்டன் அணியும் நியூகாசல் யுனைட்ட அணியும் மோதின.
இப்போட்டியில் நியூகாசல் யுனைட்டட் அணி 2 – 0 என கோல்கள் கணக்கில் அடித்து எவர்ட்டன் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இதேவேளை மென்செஸ்ட்டர் சிட்டியும் செப்பீல்ட் யுனைட்டட் அணியும் மோதிய போட்டியில், மென்செஸ்ட்டர் சிட்டி 1-0 என்ற கோல் கணக்கில் அடித்து வெற்றியை பதிவு செய்தது.
இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் மென்செஸ்ட்டர் சிட்டி 44 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியதுடன் இரண்டாம் இடத்தில் 41 புள்ளிகளுடன் மென்செஸ்ட்டர் யுனைட்டட் அணி உள்ளமை குறிப்பிடத்தக்கது.