கழகங்களுக்கு இடையிலான ரக்பி லீக் சம்பியன் அணியை பாராட்டும் விருது விழா கொழும்பு கிங்ஸ்வுட் ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றபோது, சம்பியன் கிண்ணத்தை வென்ற கண்டி விளையாட்டு கழகம் அதற்கான கிண்ணத்தை நிபொன் பெயின்ட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் நேமன் அபேசிங்கவின் கைகளால் பெற்றுக்கொண்டது.
இலங்கை ரக்பி சங்கம் இந்த ஆண்டுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கழகங்களுக்கு இடையிலான ரக்பி லீக்கில் தோல்வியுறாத அணியாக கண்டி வீரர்கள் சம்பியனாயினர். இதில் இரண்டாம் இடத்தை ஹவ்லொக் விளையாட்டுக் கழகம் பெற்றது.
போட்டித் தொடரின் சிறந்த வீரராக கண்டி விளையாட்டுக் கழகத்தின் தரிந்த ரத்வத்த விருது வென்றதோடு அதற்காக அவர் ஒரு இலட்சம் பணப் பரிசையும் வென்றார். தொடரின் பிளேட் கிண்ணத்தை வென்ற கடற்படை அணி மற்றும் அதன் இரண்டாம் இடத்தைப் பெற்ற விமானப்படை அணியும் பாராட்டப்பெற்றன.
நிபொன் பெயின்ட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த விருது விழாவுக்காக இலங்கை ரக்பி சங்கத்தின் அதிகாரிகள், நிபொன் பெயின்ட் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ரக்பி வீரர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.