Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை மருதமடு அன்னையின் 500 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த திருச்சுரூப வரலாறு : பகுதி – 1மருதமடு அன்னையின் 500 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த திருச்சுரூப வரலாறு : பகுதி – 1

மருதமடு அன்னையின் 500 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த திருச்சுரூப வரலாறு : பகுதி – 1மருதமடு அன்னையின் 500 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த திருச்சுரூப வரலாறு : பகுதி – 1

4 minutes read

மன்னார் மடுமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு சிறப்பு கவர் ஸ்டோரி தொடர்..

16ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம், யாழ்குடா பிரதேசங்கள், மாந்தை பெருநிலப்பரப்பு, மன்னார்த்தீவு, போன்றன யாழ்ப்பாண இராட்சியமாக விளங்கின. அக்காலத்தில் யாழ்ப்பாண இராட்சியத்தை சங்கிலியன் என்னும் ஏழாம் பரராசசேகரசிங்கை மன்னன் ஆண்டு வந்தான். போர்த்துக்கேயர் இலங்கையெங்கும் வியாபாரிகளாக நடமாடித்திரியுங்காலத்தில் தூய பிரான்சிஸ்கன் சபையினர் மாந்தை நகரில் போதித்து பலரை மனமாற்றியிருந்தனர். இவர்களின் காலத்தில் பல சிற்றாலயங்கள் மாந்தைப் பெருநிலப்பரப்பில் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் பிரதான ஆலயமாக மாந்தை மாதா ஆலயம் அமைந்திருந்தது. செபமாலை மாதாவென்று தற்போது அழைக்கப்படும் மருதமடு மாதாவின் உண்மையான சுரூபத்தின் ஆதி இருப்பிடம் மாந்தைப்பிட்டியில் அமைந்துள்ள தற்போதைய லூர்த்துக்கெபி கோவிலடியாகும்.

images (1)     Madhu_Church_(Madu_Church)

16ம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் மன்னாருக்கு வந்தபோது மாந்தை பட்டினமும், திருக்கேதீஸ்வர கோவிலும் பாழடைந்திருந்ததாகவும். 1560 இல் மன்னார் கோட்டையை டி.கொண்ஸ்ரன்டைன், டீ.பிறாங்கன்ஸ் என்பவர்கள் தலைமையில் கட்டுவதற்கு இங்கிருந்து முருகைக்கற்கள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் (Chronical page-28). 1658 இல் மாந்தையில் உள்ள ஆரோக்கிய மாதாகோவில் டச்சுக்காரரின் ஆட்சியில் விழுந்ததினால் அங்குள்ள கிறீஸ்தவர்கள், மாதாவின் சுரூபத்தை வன்னிக்கு எடுத்துச்சென்றதாகவும், 1670 இல் மாந்தைக்கோவில் டச்சுக்காரருக்கு கூட்டம் கூடும் இடமாக மாற்றப்பட்டதாகவும், யாழ் அரசஅதிபர், திரு.எச்.நெவில் (Mr.H.Nevill) தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார், அத்துடன் 1670 இல் டச்சுக்காரர் பதித்த நிலக்கல்லை தான் கண்டெடுத்ததாக கூறியுள்ளார். (Codex Madhu 1888, Cronicle Madhu  அத்தியாயம் 3 பக்-26)

Bishop Joseph Rayappu

பிரான்சிஸ் சபைக்குருக்கள் 1542ம் ஆண்டு மாதோட்டத்தில் சிலை வழிபாட்டுக்காரர் பலரை மனமாற்றி கத்தோலிக்க விசுவாசத்தில் வளர்த்துள்ளனர். 1544ல் மன்னார் தீவில் வேதசாட்ச்சிகளாய் மரித்தவர்களைத் தவிர ஏனையோர் மாதோட்டத்திற்கு வந்து பிரான்சிஸ்கன் சபையினரின் கண்காணிப்பில் வாழ்ந்தனர். அருட்தந்தை மசேயிற் அ.ம.தி. அடிகளார் 1886ல் மடுவிலுள்ள “கோடேக்ஸ்” என்ற குறிப்பேட்டில் மருதமடு மாதாவின் ஆரம்ப இருப்பிடம் மாந்தை என பரம்பரையாக பேசப்பட்டுவருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

பேதுரு டி. பென்ரக்சன் எனும் குருவானவரால் 1614ம் ஆண்டு மாந்தையிலேயே ஆரோக்கிய அன்னைக்கென்று ஓர் ஆலயம். கட்டப்பட்டது என வெளிப்படுத்தியுள்ளார். இப்பின்னணியில் மாந்தை திருமுழுக்குத் தொட்டியையும், மாந்தை ஆலய பீடத்தின் முன்னிருந்த நற்கருணை கிராதியையும், மடு அன்னையின் திருச்சுரூபத்தையும், பற்றிய தொன்மையை அறிந்து கொள்ளலாம். மாந்தை திருமுழுக்குத் தொட்டி மாந்தை துறைமுகத்திற்கு அருகாமையில் கண்டெடுக்கப்பட்ட தொன்மை வாய்ந்த திருமுழுக்குத் தொட்டி. தற்போது வவுனியா அருங்காட்ச்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இத்தொட்டி கேரளாவிலுள்ள சிரியான் மரபு மீறாத திருச்சபைக் கோவிலில் காணப்படும் திருமுழுக்குத் தொட்டியை ஒத்ததான அமைப்பைக்கொண்டது. இத்தொட்டியின் வெளிச் சுற்றளவு 330cm ஆழம் 132cm அதன் தடிப்பு அண்ணளவாக 12.7cm எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மாந்தை ஆரோக்கிய அன்னை ஆலயம் 1670ல் ஒல்லாந்தர் கைவசமானது. அவர்கள் இவ்வாலயத்தை தமக்குரிய கூட்டங்களை நடாத்தும் மண்டபமாக பாவித்துள்ளனர். 1834ல் காசிச்செட்டி என்பவர் மாந்தையில் இடிபட்ட ஆலயப்பகுதிகள் இருந்ததாக தனது “சிலோன் கசற்றி” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இவ்விடத்திலே பீடத்திற்கு முன்பகுதியில் இருக்கும் நற்கருணைக் கிராதியையும், ஒரு சிறிய மாதா சுரூபத்தையும், பி.டபிள்யூ.டி கண்காணிப்பாளர்கள் கண்டு. அதை பக்தியோடு பேணிப் பாதுகாத்து வந்தனர். (அன்ரனைனஸ்: 1956–1979-7) தற்போது அந்த நற்கருணை கிராதியோடு இணைந்ததாக லூர்த்து கெபி ஒன்றை 1949ல் அருட்தந்தை ஜெ. சிங்கராயர் அடிகளார் அப்போதைய ஆயர் கியோமர் ஆண்டகையின் வழிநடத்தலில் கட்டியெழுப்பியுள்ளார். இக்கெபியானது 30 வருட போராட்ட காலங்களில் காப்பாற்றப்பட்டு இன்றுவரை நம் முன்னோரின் விசுவாசத்தை வெளிக்காட்டும் தொன்மைச் சின்னமாக காட்ச்சியளிக்கிறது.

news-2008-4-images-newsmadu_shrine    Madhu_8_TC0305

மாந்தையில் இருந்த மாதா சுரூபத்தை சில பிரான்சிஸ்கன் சபைக் குருக்களும், மாந்தை மக்களும், முதல் தடவையாக இடம் பெயர்ந்து மடுவிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். எனும் பல்டேயுஸ் பாதியாரின் குறிப்பை ஆதாரங்காட்டி 1894ல் ஜே.பி லிவின்ஸ் என்பவர் தனது “மனுவல் ஒவ் வன்னி” எனும் நூலில் 254ம் பக்கத்தில் கூறியுள்ளார். இக்கருத்தையும் “மாந்தை மாதாவே மடுமாதா” எனும் மாதோட்ட மக்களின் ஏகோபித்த தொனிக்குரலையும் ஆதாரமாகக் கொண்டு மன்னார்த் தீவு கிறிஸ்த்தவர்கள் மரிப்பதற்கு முன்னரே மடு அன்னை சுரூபம் மாந்தை ஆலயத்தில் இருந்துள்ளது

1669ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைத்தீவை ஒல்லாந்தர் கைப்பற்றியபோது, மன்னார் தீவில் வாழ்ந்த கிறீஸ்த்தவர்களுக்கு எதிராக ஓரு கொடூரமான வேதகலாபனை ஆரம்பமாகியது. வண.பிதா.மெய்சட் OMI (Rev.Fr.Massiet-OMI) என்பவர் மடுத்தேவாலய சரித்திரப் புத்தகத்தில் (Codex–histrocious. 1886) இல் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “1670 இல் மாந்தையில் ஆரோக்கிய அன்னை எனும் பேரில் ஓர் கோவில் இருந்ததாகவும் அதை வண.பிதா.பெற்ரோ டீ பெற்றாங்கோ 1614 இல் கட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்”. (Our lady of Good Health built by. Rev.Fr.Pedro de Betanco. Chronicle Chapter, II page 20 th second para) பல இந்தியக் குருக்கள் வள்ளம் மூலம் நாட்டைவிட்டு வெளியேறியமையினால், மன்னார், மாந்தை, ஆகிய இடங்களில் வாழ்ந்த கிறீஸ்தவர்கள் வேதத்தில் தளைத்திருந்த அக்காலத்து சங்கீத்தான், உபதேசியர், போன்றவர்கள்; தலைமையில் இரவில் மறைவாக சிறு சிறு குழுக்களாக ஒன்று கூடி மெழுகுவர்த்தி உதவியோடு வேதத்தைப் பரப்பினர். இவர்கள் வேதகலாபனையிலிருந்து கிறீஸ்தவ மதத்தையும், மக்களையும், காப்பாற்றிக் கொள்ள செபமாலையை ஓர் ஆயுதமாக எடுத்துக்கொண்டனர்.

தொடரும் ….

Peter Mr.Peter Sinclair | Project Consultant & Trainer | மன்னாரிலிருந்து

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More