செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை மருதமடு அன்னையின் 500 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த திருச்சுரூப வரலாறு : பகுதி – 5மருதமடு அன்னையின் 500 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த திருச்சுரூப வரலாறு : பகுதி – 5

மருதமடு அன்னையின் 500 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த திருச்சுரூப வரலாறு : பகுதி – 5மருதமடு அன்னையின் 500 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த திருச்சுரூப வரலாறு : பகுதி – 5

8 minutes read

2011 ஆவணி மாத திருவிழாவிற்கு முன், மன்னார் மேதகு ஆயர் ஜோசப் ஆண்டகை அவர்கள், 2008 இல் ஆரம்பிக்கப்பட்ட அழகிய இரண்டு மாடிக் கட்டிடத்தை, குருக்கள் தங்குவதற்காக திறந்து வைத்தார். பல ஆண்டுகளின் பின் இக்கட்டிடம் ஒன்றே மடுத்திருப்பதியில் ஸ்தாபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 1544ம் ஆண்டுக்கு முன்னரே பிரான்சிஸ்கன் சபைக் குருக்களினால் மாந்தையில் வைக்கப்பட்ட மாதா சுரூபம் 500 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் மடுவில் மடுமாதா என பக்தர்களால் அன்பாக அழைக்கப்பட்டு அருள்மழை பொழிந்து கொண்டிருக்கின்றார்.

வருடந்தோறும் நடைபெறும் மடு அன்னையின் திருநாட்கள்:

1. தை 1ம் நாள் – இறைவனின் அன்னை தூய கன்னி மரியா திருவிழா (Mother of God)

2. மாசி 2ம் நாள் – காணிக்கை மாதா திருவிழா

3. பங்குனி 10ம் நாள் – தென்பகுதி சிங்களவர்களினால்;; பாராம்பரியமாக கொண்டாடப்படும் திருவிழா (Feast that is being celebrated traditionally by the Sinhalease brothern from Southern part of Srilanka)

4. பெரிய வியாழன் தொடக்கம் உயிர்த்த ஞாயிறு வரை – பரிசுத்த ஞானொடுக்கம்

5. வைகாசி 1ம் நாள் – ஞாயிறு மாதாவின் மாதம் (Month of Mary)

6. ஆடி 2ம் நாள் – மரியாயின் மாசற்ற இதயம் – திருவிழா

7. ஆவணி 15ம் நாள – தூய கன்னி மரியாயின் விண்ணேற்புத் திருவிழா

8. புரட்டாதி 8ம் நாள் – தூய கன்னி மரியாயின் பிறப்பு திருவிழா (Birth of Mother Mary)

9. ஐப்பசி 1ம் சனி – மடுத் திருப்பதியின்; திருவிழா (Madhu Church Feast)

10. மார்கழி 8ம் நாள் – தூய கன்னி மரியாயின் அமலோற்பவ திருவிழா (Holy Conception of Mary Mother)

matha

1670 – 2011 ம் ஆண்டு வரையான மருதமடு அன்னையின் தேவாலயத்தை பரிபாலித்த

ஆயர்கள், குருக்கள், பொதுநிலையினர்

ஆண்டு                            ஆயர்கள் –   குருக்கள் –   பொதுநிலையினர்

1. 1670-1697       மடு ஒரேடேரியன் சபை வ.பிதா யோசவாஸ் (Oratorians)

2. 1697-1720       வண.பிதா பெற்றோ பெரேரா (Rev.Fr.Pedro Perrao)

3. 1720-1727       வண. பிதா. அந்தோனியோ டீ டவாரோ (

4. 1727-1728       வண. பிதா. பெற்ரோ டீ. சல்டன்கா

5. 1728-1732       வண. பிதா. யோவா டீ. சா

6. 1733-1743       வண. பிதா. பிரான்சிஸ்கோ கொண்சல்வாஸ்

வண. பிதா. பிராஸ் பெரேரா (சுநஎ.குச.டீசயள Pநசநசைய)

வண. பிதா. கஸ்ரோடியோ டீ. அந்திராதி

வண. பிதா. தியாயோ டீ. றொசாரியோ

7. 1743-1847       மடுப்பரிபாலனம் ஒறோரேரியன் குருக்களினால் வழிநடாத்தப்பட்டது. இக்காலப்பகுதியில் போர்த்துக்கேயர் 16 நூற்றாண்டில் தென் ஆசியாவிலுள்ள சில நாடுகளை தமது ஆளுகைக்கு உட்படுத்தியதால் ஆயர்களின் பாதுகாப்பில் பாட்ராடோவை உட்படுத்தின. பரிசுத்த பாப்பரசரின் ரோமை ஆளுகைக்கு உட்பட்ட திருச்சபை புரப்பக்கண்டா என அழைக்கப்பட்டது. இக்காலத்தில்; மடுப் பகுதியில் நிச்சயமற்ற தன்மை நிலவியது.

8. 1848-1849       இக்காலப்பகுதியில், இலங்கைத் திருச்சபை கொச்சின் மறைமாவட்டத்தின் கீழ் இயங்கி வந்தது. “பாப்பாண்டவர் கிரகோரி 16” கொச்சியிலிருந்து இலங்கையை பிரித்து 03-12-1834 இல் தனி “விக்கார் அப்போஸ்தலிக்க” மறை நாடாக்கினார். 1வது ஒரட்ரோரியன் குருவாக கோவையை சேர்ந்த வண.பிதா பிரான்சிஸ் சேவியர் அ.ம.தி. நியமிக்கப்பட்டார்.

9. 1848-1852       வண. பிதா ஜோசப் சியாமின ஆளுகை.

10. 1852-1855     மடுமாதா தேவாலய நிர்வாகத்தில் நிச்சயமற்றதன்மை காணப்பட்ட இக்காலத்;;;தில் வண. பிதா ளு. விவியன் இடைக்கால பொறுப்பாளராயிருந்தார்.

11. 1856-1857     அதி. வந்த வடமாகாண ஆயர் கலாநிதி பெற்றாச்சின் ஆயரின் மறைவிற்குப்பின், வண. பிதா து.டீ.நு புளோரின் ஆளுகை.

12. 1857-1862     மடு பரிபாலனம் அமல உற்பவ சபையினரின் (அ.ம.தி.) நிர்வாகத்திற்கு உட்பட்ட காலம். வண. பிதா கு.ஆ.து கோரடஸ் வண. பிதா யு.து. ளுவ.ஜீனிஸ்.

13. 1862-1868     அதி. வந்த வடமாகாண ஆயர் ளு.செமாரியா அவரின் இறப்பிற்குபின் வண. பிதா யு.து.ஆ.டு . பூஷாக் – அ.ம.தி.ஆளுகை.

14. 1869-1873     வண. பிதா து. து. ஆ . பௌசின் அ.ம.தி. ஆளுகை.

15. 1873-1875     இருவருடங்களாக மடு பரிபாலனம் பற்றி இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்றன. ஆயருக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

16. 1875-1883     அதி வந்த. வடமாகாண ஆயர் கலாநிதி பொஞ்ஜீன் அ.ம.தி. ஆளுகை.

17. 1883-1893     அதி வந்த வடமாகாண ஆயர் கலாநிதி அன்று மெலிசன் அ.ம.தி. ஆளுகை.

18. 1893-1919     அதி வந்த. வடமாகாண ஆயர் கலாநிதி கென்றி யுலியன் அ.ம.தி. ஆளுகை.

19. 1919-1923     அதி வந்த. வடமாகாண ஆயர் கலாநிதி பிறேல்ட் அ.ம.தி. ஆளுகை.

20. 1924-1950     அதி வந்த வடமாகாண ஆயர் கலாநிதி து.யு கைமர் அ.ம.தி. ஆளுகை.

21. 1950-1972     அதி வந்த. யாழ் ஆயர் கலாநிதி எமிலியானுஸ்பிள்ளை மேற்றிராசன குரு ஆளுகை.

22. 1972-1973     அதி வந்த. யாழ் உதவி ஆயர் கலாநிதி டு.சு அன்ரனி மேற்றிராசன குரு ஆளுகை.

23. 1973-1981     அதி வந்த. யாழ் ஆயர் கலாநிதி தியோகுப்பிள்ளை மேற்றிராசன குரு ஆளுகை.

24. 1981-1992     அதி வந்த. மன்னார் ஆயர் கலாநிதி தோமஸ் சௌந்தரநாயகம் மேற்றிராசன குரு ஆளுகை.

25. 1992-10-20   அதி வந்த. மன்னார் ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் மேற்றிராசன குரு ஆயராக அபிஷேகம் செய்யப்பட்டு இற்றைவரை (2013) பொறுப்பேற்றுக்கொண்டார்.

sss

மடு அன்னையின் சமாதான யாத்திரைகள்

மடு அன்னையின் திருச்சுரூபம் கீழ்க்கண்ட ஆண்டுகளில் திருச்சுரூப பாதுகாப்பிற்காகவும் மக்களின் நன்மை கருதியும் மடுத்தேவாலயத்தை விட்டு; வெளியில் எடுத்துச்செல்லப்பட்டதாக சரித்திரம் கூறுகின்றது.

i. முன்னைய காலத்தில் மடுத்திருப்பதியை நிர்வகித்த கோவில் சக்கிடுத்தார் போன்றோரால் மடுக்கிராமத்தில் பஞ்சம், வரட்சி, நிலவியபோதும் சகல ஊர்மக்களும், இடம்பெயர்ந்தபோதும் மடுமாதாவின் திருச்ச்சுரூபம் 5 கி.மீ தூரத்திலுள்ள கள்ளியட்டைக்காடு எனும் விவசாய கிராமத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டதாக பல சான்றுகள் உள்ளன.

ii. இதேபோன்று மடுமாதாவின் பக்தர்களுக்கிடையில் பிணக்குகள் ஏற்பட்டபோது ஒரு பிரிவினரால் மாதாவின் திருச்சுரூபம் முன்னைய ஆண்டுகளில் கள்ளியட்டைக்காட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக பழைய தரவுகள்; சான்று பகர்கின்றன.

iii. 1949ல் மடுமாதாவின் முடிசூட்டு விழாவின் முன்னோடியாக செபமாலை ஓதல் எனும் கருப்பொருளில் யாழ் மேற்றிராசணத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

iv. 1974ல் மடுமாதாவின் 50 வருட முடிசூட்டு விழா ஞாபகமாக மனம்திரும்புதல் எனும் கருப்பொருளில் யாழ் மேற்றிராசணத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

v. 2000ல் 75 வருட முடிசூட்டு விழா ஞாபகமாக சமாதானம் எனும் கருப்பொருளில் யாழ் மேற்றிராசணத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

vi. 2001ல் இலங்கையின் சமாதானத்தை வேண்டி மன்னார் மாவட்ட ஆலயங்கள், கொழும்பு, அனுராதபுரம், சிலாபம், கண்டி, போன்ற மறைமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

vii. 2009 சித்திரையில் மடு அன்னையின் பழமை வாய்ந்த புனித சுரூபத்தை கடும் போரில் இருந்து காப்பாற்ற வண பிதா எமிலியானுஸ்பிள்ளை அவர்களால் 21 கி.மீ தூரத்திலுள்ள தேவன்பிட்டி தேவாலயத்திற்கு பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்பட்டது.

viii. 2009 ஆவணி 5ம் திகதி போர் கிளிநொச்சியை நோக்கி நகர்ந்தபோது, மீண்டும் மடு அன்னையின் திருச்சுருபம் மன்னார் ஆயர் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டது.

ix. 2009 ஆவணி 10ம் திகதி இராணுவம் மடுத்தேவாலயத்தை ஆயரிடம் கையளித்தபின் திருச்சுருபம் மீண்டும் மடு தேவாலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

x. 2009 ஆவணி 15ம் திகதி மடுத்தேவாலயம் மந்திரிக்கப்பட்டு மீண்டும் பக்தர்களுக்காக திறந்து விடப்பட்டது.

xi. அன்று முதல் இன்றுவரை இயல்பு நிலையில் அன்னையின் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

மடுத்திருப்பதி பக்தர்களின் புனித பிரதேசமாக பாரம்பரியமாக கீழ்கண்ட

எல்லைகளைக் கொண்டு இயங்கி வருகின்றது.

கிழக்கு :

மடு தேவாலயத்திலிருந்து பரப்புக்கடந்தான் வீதியில் அமைந்துள்ள 02கி.மீ தொலைவிலுள்ள சின்னவில் வெளி வரை.

மேற்கு: 

மடு தேவாலயத்திலிருந்து மடுறோட், சந்திக்குச் செல்லும் பாதையில் 02கி.மீ தூரத்திலுள்ள சின்னப்பண்டிவிரிச்சான் சந்திக்கு அருகில் அமைந்துள்ள மடு நுழைவாயில் வரை.

தெற்கு: 

மடு தேவாலயத்திலிருந்து பெரியபண்டிவிரிச்சான் வீதியில் அமைந்துள்ள 02கி.மீ சந்தியிலுள்ள 100 வீட்டுத்திட்டம் வரை.

வடக்கு :

மடு தேவாலயத்திலிருந்து தட்சணாமருதமடு கிராமம் செல்லும் 03கி.மீ தூரத்திலுள்ள நெல்வயல் காணி வரை.

Untitled

உசாத்துணை:

1.            மடு அன்னையின் “குறோனிக்கல் திருத்தலம்; எழுதியவர் வண.பிதா யு.து.P. அந்தோனியஸ் அ.ம.தி. வெளியீடு யாழ் மறைமாவட்டம் 1956ம் ஆண்டு

2.            “ஒறோட்டோரியம் இலங்கை சபை 1687-1742 வரை” வெளியீடு 1938ம் ஆண்டு.

3.            “இலங்கை கசட்டியா; எழுதியவர் சைமன் கா~p செட்டி 1834ம் ஆண்டு

4.            “மன்னார் கசட்டியா,; எழுதியவர் நு.டீ டென்காம் ஊ.ஊ.ளு 1901ம் ஆண்டு

5.            “மன்னாரின் வேதசாட்சிகள்” எழுதியவர் யு.து.P அந்தோனியஸ் அ.ம.தி. யாழ்ப்பாணம் 1944ம் ஆண்டு.

6.            “இலங்கை அமலமரித் தியாகிகள் சபை 1848-1948 வரை” எழுதியவர் னு.து.P குறுப்பு  1948ம் ஆண்டு

7.            “யாழ்ப்பாணத்து கத்தோலிக்க சமயம்” எழுதியவர் வண.பிதா ஞானப்பிரகாசியார் அ.ம.தி. 1893-1918 வரை, 1926ம் ஆண்டு வெளியீடு

8.            “மடுத்தேவாலய கோடெக்ஸ் சரித்திரம் 1886-1950 வரை”

9.            அதி. வந்தனைக்குரிய கலாநிதி து.யு கைமர் அ.ம.தி. யாழ் ஆயர் 1924-1950 வரை வெள்ளிவிழா மலர் வெளியீடு

10.          “போர்த்துக்கேயர் காலத்தில் மடு பழமை வாய்ந்த தேவாலயம்” வெளியீடு 24-06-1875

11.          “புதிய மடுத்தேவாலயம்” மன்னார் மாவட்ட நீதிமன்று வழக்காடு இல. 338 யாழ்ப்பாண விக்காரியத்திற்கு சார்பாக இலங்கை உயர் நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டது. அதி. வந்த. ஆயர் கலாநிதி கிறிஸ்த்தோப்பர் பொஞ்ஜீன் அ.ம.தி. யினால் எழுதப்பட்டது.

12.          “மருதமடு திருப்பதியின் சரித்திர சுருக்கமும,; அதன் ஞானவளர்ச்சியும்,” வெளியீடு, மடுத்திருப்பதி பரிபாலன சுவாமிகள், மடுக்கோயில்

13.          “மாந்தை மாதாவே மருதமடுமாதா” செ. மொத்தம் போல் 1965.

14.          “நமது கத்தோலிக்கத்தின் தொன்மைச் சின்னங்கள்” அருட்தந்தை ம.க. அருள்பிரகாசம், மன்னா பொழிவு 14, பெப்ரவரி 2011.

15.          “திருச்சபை வரலாற்றுத் துளிகள்” – பிரசுரித்தவர் அருட்தந்தை சா.பி கிருபானந்தன்-2007

16.          “The  Chronicale  of  the   sanctuary  of  our  lady  of  madhu”  by Fr. A.J.B  Anloninus omi

நிறைவு …

Peter   Mr.Peter Sinclair | Project Consultant & Trainer | மன்னாரிலிருந்து

TP : 0094 77-2131-652

Email : petsinclair@gmail.com

முன்னையபகுதிகள் ….

http://www.vanakkamlondon.com/madumatha-1/

http://www.vanakkamlondon.com/madumatha-2/

http://www.vanakkamlondon.com/madumatha-3/

http://www.vanakkamlondon.com/madumatha-4/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More