சுமேரியர் அமைத்த உலகின் முதல் நகரங்கள் | சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 8சுமேரியர் அமைத்த உலகின் முதல் நகரங்கள் | சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 8

 

சுமேரியர் உருவாக்கிய உலகின் முதல் நகரம் உருக் என்று அழைக்கப்பட்டது.  கிறித்துவுக்கு முன் 4000 ஆண்டளவில் அவர்கள் இருபத்தியொரு நகரங்களையும் பின் மக்கள் தொகை பெருகப் பெருக எல்லாமாக எழுபத்தோரு சிறிய நகரங்களையும் உருவாக்கினர். எல்லா நகரங்களுக்கும் தலை நகரமாக ஊர் என்னும் நகரமே விளங்கியது. ஊர் என்னும் நகரத்தின் தாக்கமே பின்னாளில் தமிழர்களின் ஊர் ஆகியது எனலாம். ஊரிலிருந்த சீகுராட்டில் அறிஞர்கள் கூடிச் sanka வளர்க்கப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. சங்காவும் சங்கம் ஆகியிருக்கலாம் அல்லவா? சீகுராட் கூட மருவி எங்கள் கோவிலின் சிகரம் ஆகியிருக்கலாம் என்பதுதான் எமது ஆய்வு.

1601131_10202644519046879_1198341393_n

பல ஆண்டுகளாக கேம்பிரிச் பல்கலைக் கழகம் ரெல் பிரேக் எனத் தற்போது அழைக்கப்படும் ஓரிடத்தில் வேறு சில பல்கலைக் கழகங்களுடன் சேர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. அந்த ஆய்வின் பெயரே அன்சியன்ற் நகர். நகர் என்பது சமஸ்கிருதம் என நீங்கள் வாதிடலாம். உண்மைதான். நகர் என்பது சமஸ்கிருதச் சொல்லே. ஆனால் நகரம் என்பது கி.மு 4௦௦௦ வருடத்துக்கு முந்தய சுமேரியச்சொல். தமிழிலும் நகரம் என்பது நாகரிகமடைந்த ஊரைக் குறிக்கும் தமிழ்ச் சொல். தமிழ்ச் சொல்லையே ஆரியர் சிறிது மாற்றி நகர் என்று வைத்தனர்.

சுமேரியர் நாகரிக வளர்ச்சி அடைந்து கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களின் பின்னரே எகிப்திய இனமும் இரண்டாயிரம் வருடங்களின் பின்னரே சீனர்களும் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளின் பின் மாயன்சும் நாகரிகம் அடைந்தனர் என்கின்றனர் ஆய்வாளர்கள். அவுஸ்ரேலியாக் கண்டம் நிலத்தோடு தொடர்பின்றி இருந்ததனாலும் அதிக தூரத்தில் இருந்ததனாலும் நாகரிக வளர்ச்சியை எட்டவில்லை. அத்தோடு மற்றவர் நாகரிகம் அடையும் போது எல்லோரும் நாகரிகமடைவர் என்பதும் சரியானதன்று. ஏனெனில் அபொரோஜினீசும், தென்னமெரிக்கக் காடுகளில் அரை நிர்வாணமாய் இப்பொழுதும் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களும், இலங்கை இந்திய வேடர்களும் இன்றுவரை நாகரிகமடையவில்லை. 

grtr

சுமேரியர் செங்கற்களைச் சூளையில் இடும்போது ஒரு திரவப் பொருள் உருகி ஓடியது. அது இறுகியபோது கடினப் பொருள் ஆகியதாகவும் அதிலிருந்தே செப்பு என்னும் உலோகம் அறிமுகமாகியது என்றும் கூறுகின்றனர் . சிறிது காலத்தில் வெள்ளீயம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் வெள்ளீயத்தினால் கத்திகள், வாட்கள் போன்றவை செய்யப்பட்டன. கலப்பையின் மண்ணுக்குள் புதைபடும் பூண் என்னும் பகுதி கூட ஆரம்பத்தில் வெள்ளீயத்தினால் ஆக்கப்பட்டது. பின்னர் வெள்ளீயம் இலகுவில் வளைந்ததனால் மாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. 

செப்பினாலும் வெள்ளீயத்தினாலும் சுமேரியர் செம்புகள், தட்டுக்கள் போன்றவற்றையும் அணிகலன்களையும் செய்தனர். மற்றைய இனங்கள் சிப்பி சோகி போன்றவற்றாலான அணிகலன்களை அணிந்தபோது அழகாக வடிவமைக்கப்பட்ட உலோக நகைகள் மணிகளால் செய்யப்பட்ட நகைகள் சுமேரியர் அணிந்ததாகக்  கூறப்படுகின்றது. அதிலும் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு தங்க நகைகள் சுமேரியர் அணிய ஆரம்பித்தபின்னர், வசதியிற் குறைந்தவர்கள் தங்க நகைகளைப் போன்று போலி நகைகள் செய்து அணிந்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.

 

 

தொடரும் …

 

Nivetha   நிவேதா உதயராஜன் | வரலாற்று ஆய்வாளர் | லண்டனிலிருந்து

 

 

இத்தொடரின் முன்னைய பகுதிகள்

http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-introduction/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-histry-1/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-2-2/

http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-history-3/

http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-history-4/

http://www.vanakkamlondon.com/sumeriar-tamil-history-5/

http://www.vanakkamlondon.com/sumerian-history6/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-7/

 

 

(சர்ச்சைக்குரிய விடயம் ஆனால் ஆழமாகப் பார்க்கவேண்டிய வரலாறு. திரு சிவகனேஷன் அவர்களுடைய வழிகாட்டலுடன் திருமதி நிவேதா உதயராஜன் காத்திரமான ஆய்வு ஒன்றைச் செய்துள்ளார். சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்யார் இந்த சுமேரியர்இவர்களுடைய நாகரிக வளர்ச்சி எங்கே ஆரம்பமானதுஇவர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு என்னஅப்படியானால் தமிழர் யாருடைய வழித்தோன்றல்இவற்றுக்கான விடைகளைத் தேடி விரிகின்றது இத்தொடர்…)

 

ஆசிரியர்