தேவையான பொருட்கள் :
பொன்னாங்கண்ணி கீரை-1 கட்டு
தக்காளி-2
பாசி பருப்பு-1 1/2 வீசம்படி
தாளிக்க :
எண்ணெய் -தேவையான அளவு
கடுகு
உளுந்தம் பருப்பு
சீரகம்
வெங்காயம்-1
பொடி வகைகள் :
சீரக பொடி -2 தேக்கரண்டி
மிளகாய் பொடி -2தேக்கரண்டி
மஞ்சள் தூள்- சிறிதளவு
உப்பு-தேவையான அளவு
செய்முறை :
1.பாசி பருப்பை சீரக தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைத்துக்கொள்ளவும்.
2.பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
3.அதில் நறுக்கிய கீரையை சேர்த்து தண்ணீரையும்,மிளகாய் தூளையும் சேர்த்து வேக விடவும்.
4.முக்கால் பதம் வெந்தவுடன் உப்பு போட்டு பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை ஒரு தனி கடாயில் போட்டு தாளித்து அதில் கொட்டி கொதிக்க விட்டு இறக்கவும்.
இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
வறுவல் வகைகள் இதற்கு சிறந்த சைடிஷ்.
நன்றி : சமையல் புலி