யுக்ரேன் அதிபர் வொலாடிமிர் செலன்ஸ்கி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“யுக்ரேனிய பாதுகாப்பு படைகள் ரஷ்ய படைகளுக்கு ஈடுகொடுத்து வருகின்றன. இருப்பினும் ரஷ்ய படைகள் யுக்ரேன் நகரங்களில் தொடர்ந்து ஷெல் குண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.”
“பொதுமக்கள் இருக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்த ரஷ்ய திட்டமிட்டிருப்பதன் மூலம், ரஷ்யாவின் திட்டத்தை முறியடிக்கும் முயற்சியில் யுக்ரேன் வெற்றிப் பெற்றுள்ளது என்று தெரிகிறது.”
“எங்களிடம் இழப்பதற்கு எங்களின் சுதந்திரத்தை தவிர வேறு ஏதுமில்லை” என்று செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும் தனது சர்வதேச கூட்டணி நாடுகளிடமிருந்து தினந்தோறும் ஆயுதங்களை பெற்று வருவதாக செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மீது ரஷ்யா வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்திய கூறப்படும் குற்றச்சாட்டின் மீது விசாரணை தொடங்கியுள்ள நிலையில் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
நன்றி:பிபிசி தமிழ்