பிரிட்டன் அரசாங்கம் புகலிடம் தேடி வந்தோரை முதல்முறையாக அந்நாட்டு ருவாண்டாவுக்கு அனுப்பவுள்ளது.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்தது.
அந்த விமானம் லண்டனின் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ருவாண்டாவின் தலைநகர் கிகாலியில் தரையிறங்க இருந்தது.
ஆனால் மேல்முறையீடு செய்த ஓர் அமைப்பு, ருவாண்டாவுக்கு அனுப்பப்படவிருந்த 31 பேரில் 23 பேரின் விமானச் சீட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்தது.
நாடு கடத்தப்படவிருந்தவர்கள் அல்பேனியா, ஈராக், ஈரான், சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
அந்தச் சர்ச்சைக்குரிய திட்டம் சட்டத்திற்கு உட்பட்டதா என்பதை அடுத்த மாதம் நீதிபதிகள் நிர்ணயிக்கும் வரை அது நடப்புக்கு வரக்கூடாது என்பது மேல்முறையீடு செய்தவர்களின் வாதமாக இருந்தது.
எனினும் பிரான்சிலிருந்து ஆபத்தான வழிகளில் கடலைக் கடந்து பிரிட்டனுக்கு வருவோரைத் தடுக்க அந்தத் திட்டம் தேவை என பிரிட்டனின் உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேலும் பிரதமர் போரிஸ் ஜான்சனும் கூறினர்.
அந்தத் திட்டத்தின் கீழ் சட்டவிரோதமாகப் பிரிட்டனுக்கு வருவோர் கிகாலிக்கு அனுப்பப்படுவர்.
உண்மையாகவே புகலிடம் தேடுவோர் பிரான்சிலேயே இருக்க வேண்டும் என்கிறது பிரிட்டிஷ் அரசாங்கம்.