புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் பிரிட்டனின் திட்டம் இறுதி நேரத்தில் தோல்வியடைந்தது.
புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிச் செல்லவிருந்த முதலாவது விமானமே இறுதி நேரத்தில் இவ்வாறு இரத்து செய்யப்பட்டது.
மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய, விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் பயணம் இரத்து செய்யப்பட்டது.
புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை பிரித்தானிய நீதிமன்றம் நேற்று நிராகரித்திருந்தது.