2021ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து அங்கு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பெண்கள் மற்றும் சிறுமிகளை உலகிலேயே மிகவும் அடக்குமுறைக்கு உட்படுத்தும் நாடாக ஆப்கானிஸ்தான் மாறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட அங்குள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகளையும் இழந்துள்ளனர் என ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.
“ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்கள், பெரும்பாலான பெண்களையும் சிறுமிகளையும் தங்கள் வீடுகளில் திறம்பட சிக்க வைக்கும் விதிகளை திணிப்பதில் ஒரு தனி கவனம் செலுத்துகின்றனர்” என்று ஐ.நா அறிக்கையில் தெரிவித்துள்ளது.