சமூக வலைத்தளங்களில் பிராங் காணொளிகளை நாம் அதிகமாக காணுகின்றோம். இவ்வாறான சில பிராங் நம் மனதை பார்க்கும் போது துன்பப்படுத்துகின்றது. இது இவ்வாறு இருக்க அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் பிராங் செய்து துப்பாக்கியால் சுடப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கக்கப்பட்டுள்ளார்.
21 வயதான டெனர்க்கு டெக்சி என்பவர் ஓட்டுனர் மீது வாந்தி எடுப்பது சூப்பர் மார்க்கெட்டில் திருடுவது போன்ற பிராங்க் வீடியோக்களை தனது யூடிப் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இதை போலவே சம்பவ தினத்தில் விர்ஜினியா மாநிலத்தில் உள்ள ஷாப்பிங்க் மால் food கோர்ட்டில் , ஆலன் என்பவரிடம் பிராங் செய்த போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி வயிற்றில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.