‘Angry Birds‘ எனும் அலைபேசி விளையாட்டுச் செயலியை நிர்வகிக்கும் பின்லாந்தின் Rovio Entertainment நிறுவனத்தை ஜப்பானின் Sega Sammy Holdings நிறுவனம் வாங்கத் திட்டமிடுகிறது.
Rovio நிறுவனத்துக்காக 775.8 மில்லியன் டாலர் வழங்கத் தயாராக இருப்பதாக Sega தெரிவித்துள்ளது.
கடந்த வார நிலவரப்படி, Rovio-இன் ஒரு பங்கின் விலை 8.54 டாலர் ஆக உள்ளது. Rovio-இன் ஒரு பங்குக்கு Sega 10.16 டாலர் வழங்கத் தயாராக உள்ளது.
விரைவில் இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தம் இடம்பெறும் என BBC குறிப்பிட்டுள்ளது.