இத்தாலி – சிசிலி தீவுக்கு அப்பாலுள்ள கடலில் மிதந்த நிலையில் 2,000 கிலோகிராம் எடையில் சுமார் 70 கொக்கேய்ன் பொதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றின் பெறுமதி சுமார் 400 மில்லியன் யூரோ என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடலில் மிதந்த குறித்த கொக்கேய்ன் தொடர்பில் கடற்படைக் கண்காணிப்பு விமானம் தகவல் தந்ததாகவும் அந்தப் போதைப்பொருளைக் கடத்தல்காரர்கள் விட்டுச் சென்றிருக்கலாம் என்றும் இத்தாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பாவில் இடம்பெறும் கொக்கேய்ன் கடத்தலில் பெரும்பகுதி குறித்த வட்டாரத்திலிருந்து வருவதாக நம்பப்படுகிறது.
மூலம் – AFP