அமெரிக்காவின் மிசோரி (Missouri) மாநிலத்தில் கான்சஸ் நகரில் 16 வயது கறுப்பின சிறுவன் மீது 84 வயது நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
ரால்ஃப் பால் யார்ல் (Ralph Paul Yarl) என்ற குறித்த சிறுவன், நண்பரின் வீட்டிலிருந்து தமது இரு சகோதரர்களை அழைக்கச் சென்றிருந்தார். அப்போது அவர், தவறான வீட்டின் அழைப்பு மணியை அழுத்திவிட்டார்.
அந்த வீட்டு உரிமையாளர், கண்ணாடிக் கதவு வழியாக சிறுவனை துப்பாக்கியால் இரு முறை சுட்டதாக அவரது உறவினர் ஃபெயித் ஸ்பூன்மோர் (Faith Spoonmoore) குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, சிறுவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த வீட்டு உரிமையாளர், 24 மணி நேரம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டபின் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையின்படி, இது இனவாதம் தொடர்பான சம்பவம் அல்ல என்றும் பாதிக்கப்பட்ட சிறுவனின் வாக்குமூலம் பெற்ற பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியுமெனவும் அந்நகர பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், சுடப்பட்ட சிறுவனுக்கு நீதி கோரி நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் மீது வெறுப்புணர்வு சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.
மூலம் – ராய்ட்டர்ஸ்