ஐரோப்பாவில் அமைந்துள்ள செர்பியா நாட்டின் தலைநகர் பெல்கிரேட் பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவரின் துப்பாக்கிச்சூட்டில் 8 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
அத்துடன், இந்தத் துப்பாக்கிச்சூட்டில் ஆசிரியர் ஒருவரும், 6 மாணவர்களும் படுகாயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து, துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவனை கைது செய்துள்ளனர்.
7ஆம் வகுப்பில் பயிலும் 14 வயது மாணவனே இவ்வாறு திடீரென ஆசிரியர்கள், மாணவர்கள் என கண்ணில் பட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் செர்பியா நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.