June 4, 2023 9:58 pm

ஆஸ்திரேலியா துறைமுகத்தில் சிக்கிய பாரிய போதைப்பொருள் கடத்தல்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Port of Australia

ஆஸ்திரேலியா துறைமுகத்தில் சுமார் 14 ஆயிரம் கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாண துறைமுகத்தில் போதைப்பொருள் கடத்தப்பட இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து எல்லை பாதுகாப்புப் படையினருடன் இணைந்து அதிகாரிகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கப்பல்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அதன்போது உலோகங்கள் உருக்கும் ராட்சத எந்திரங்களை ஏற்றி வந்த கப்பலில் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மோப்பநாய்களை கொண்டு அதனை சோதித்தபோது, எந்திரங்களை பார்த்து அவை குரைத்துள்ளன.

அந்த எந்திரங்களை என்ஜினீயரிங் வல்லுனர்களை கொண்டு ஆராய்ந்தபோது, அவற்றின் உள்ளே பாலித்தீன் பாக்கெட்டுகளில் போதைப்பொருள் இருந்தமை தெரியவந்துள்ளது.

இந்த சட்டவிரோத செயலை கண்டறிதலை தவிர்க்கும் வகையில் பல அடுக்கு பூச்சுகளை கொண்ட எந்திரங்களுக்குள் தந்திரமாக அவற்றை மறைத்துள்ளனர்.

300 கிலோகிராம் அளவில் மெத்தபேட்டமைன் என்னும் உயர்ரக போதைப்பொருளை இதன்போது அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடத்தப்பட இருந்த போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு சுமார் 14 ஆயிரம் கோடி இந்திய ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தி வந்த கப்பல் எந்த நாட்டில் இருந்து வந்தது, கடத்தல் கும்பலின் பின்னணி குறித்து ஆஸ்திரேலியா துறைமுக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறார்கள்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்