June 7, 2023 6:05 am

குறுகிய தூர உள்நாட்டு விமான சேவைக்கு தடை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

குறுகிய தூர உள்நாட்டு விமான சேவைக்கு பிரான்ஸ் அரசு தடை  விதித்துள்ளது. கார்பன் உமிழ்வைக் குறைக்கும் நோக்கத்தில்  இந்த தடை பிரான்ஸ் அரசினால் விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டரை மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் ரயிலில் செல்லக்கூடிய வழிகளில் அந்த தடையைக் கொண்டுவர இரண்டு  ஆண்டுகளுக்கு முன்பே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

‘கார்பன் உமிழ்வு மதிப்பீடு’  அதிகமான உமிழ்வு, வழக்கமான உமிழ்வு, குறைவான உமிழ்வு அல்லது உமிழ்வு விவரம் தெரியவில்லை என விமானங்கள் லேபிளிடப்பட்டிருக்கும்.

கார்பன் உமிழ்வைக்  கருத்தில் கொண்டாலும் அதே நேரத்தில் அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கையை உள்வாங்குவதற்கும், சரியான நேரத்தில் ரயில்கள் இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2030ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை 40 % குறைக்கும் முயற்சியாக எடுக்கப்படும் நடவடிக்கையில் இதுவும் ஒன்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்