June 7, 2023 6:12 am

பொலிஸ் வேன் மோதி சிறுவன் படுகாயம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
பொலிஸ் வேன் மோதி சிறுவன் படுகாயம்

பொலிஸ் வேன் மோதியதில் 11 வயதுச் சிறுவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லங்காஷயர் பொலிஸார் (Lancashire Police) தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம், லான்காஸ்டரின் ஓவன் வீதியில் (Owen Road, Lancaster) நேற்றிரவு (25) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

பொலிஸாருக்கு வந்த அவசர அழைப்பை அடுத்து பொலிஸார் விரைந்து சென்ற போது, வீதியைக் கடந்த சிறுவனே இவ்வாறு பொலிஸ் வேனில் மோதி பாடுகாயமடைந்துள்ளார்.

சம்பவத்தை அடுத்து, மேற்படி வீதி சிறிது நேரத்திற்கு மூடப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து லங்காஷயர் பொலிஸாரின் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இது போன்ற ஒரு சம்பவத்தின் தரநிலையின் படி, இந்த விடயத்தை பொலிஸ் நடத்தைக்கான சுயாதீன அலுவலகத்திற்கு (IOPC) மாற்ற பரிந்துரைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்