இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், இங்கிலாந்து பிரதமரானது முதல் சட்டவிரோத குடியேற்றத்தை ஒழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.
சட்டவிரோதமாக வரும் அகதிகளுடனான விசாரணையும், அவர்களுக்கான சட்ட திட்டங்களையும் கடுமையாக்கினார்.
தற்போது புல்லட் புரூப் ஆடையுடன் களத்தில் இறங்கியுள்ளார். சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் தேடிப் பிடித்து கைது செய்துள்ளார்.
அதிகாரிகளுடன் புறப்பட்ட ரிஷி சுனக், ஹோட்டல்கள், மதுபான விடுதிகள், சலூன்கள் மற்றும் வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் ஆராய்ந்து வருகின்றார்.
இந்தத் தேடுதல் வேட்டையில் சட்டவிரோதமாக குடியேறிய சுமார் 20 நாடுகளை சேர்ந்த 105 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்திற்குள் சட்டவிரோத குடியேற்றத்தை அனுமதிக்கக்கூடாது என்பதில் பிரதமர் ரிஷி சுனக் உறுதியாகவுள்ளார்.